ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அவ்வப்போது புதுப்புது மாடல்களை வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் ஏற்படும் போட்டிகள் காரணமாக பல நிறுவனங்கள் அட்டகாசமான இரண்டு மடிப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருவதால், போட்டியை சமாளிப்பதற்காக சாம்சங் நிறுவனம் மூன்று மடிப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று மடிப்புகளாக இந்த ஸ்மார்ட்போனை விரிவுபடுத்தினால், கிட்டத்தட்ட ஒரு டேப்லெட் போல் இருக்கும் என்றும், இது பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவில் இதுபோன்ற மூன்று மடிப்புகளுடன் கூடிய சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருந்தாலும், அவை 2 லட்சத்திற்கும் மேல் விலையில் உள்ளன. ஆனால் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று மடிப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு, இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த போனை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. இத்தகைய புதிய ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.