சாம்சங் தனது சமீபத்திய வெளியீடான Galaxy S25 Ultra மாடலை இந்தியாவில் ரூ.11,000 விலையை திடீரென குறைத்துள்ளது. இந்த சலுகை புதிய போன் வாங்க விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
சாம்சங் Galaxy S24 Ultra-விற்குப் பிறகு வந்த இந்த S25 Ultra, மிக உயர்தர அம்சங்களுடன் Galaxy AI அம்சங்கள், மற்றும் பிரீமியம் டைட்டேனியம் டிசைன் கொண்டதாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது HDFC வங்கி ஆஃபர் மூலம் ரூ. 11,000 வரை தள்ளுபடியுடன் இந்த போனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகை விவரங்களை தற்போது பார்ப்போம்.
சாம்சங் Galaxy S25 Ultra மூன்று ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் கிடைக்கிறது. அவை பின்வருவன மற்றும் அதன் விலைகள்.
12GB + 256GB – ரூ. 1,29,999
12GB + 512GB – ரூ. 1,41,999
12GB + 1TB – ரூ. 1,65,999
ஆனால் இந்த மாடல் ஸ்மார்ட்போனை HDFC கிரெடிட் கார்டு முழு கட்டணத்தில் ரூ. 11,000 உடனடி தள்ளுபடியில் கிடைக்கின்றது. மேலும் HDFC வங்கியின் EMI பரிவர்த்தனைகளில் ரூ. 9,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
தள்ளுபடிக்கு பின் புதுப்பிக்கப்பட்ட விலை:
12GB + 256GB மாடல் – ரூ. 1,18,999
12GB + 512GB மாடல் – ரூ. 1,30,999
12GB + 1TB மாடல் – ரூ. 1,54,999
இந்த சலுகை சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட முக்கிய ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.