ரீல்ஸ் வீடியோவுக்காக புதிய செயலி.. இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடி முடிவு..!

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் என்றாலே பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகும் என்பதும், புகைப்படங்களுக்காகவே இந்த சமூக வலைதளம் பிரபலமானது என்பதும் தெரிந்தது. ஆனால் தற்போது, இன்ஸ்டாகிராம் திறந்தாலே ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களே பதிவாகியுள்ளன. மேலும், ரீல்ஸ் வீடியோக்களுக்கு…

insta reels

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் என்றாலே பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகும் என்பதும், புகைப்படங்களுக்காகவே இந்த சமூக வலைதளம் பிரபலமானது என்பதும் தெரிந்தது. ஆனால் தற்போது, இன்ஸ்டாகிராம் திறந்தாலே ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களே பதிவாகியுள்ளன.

மேலும், ரீல்ஸ் வீடியோக்களுக்கு சில புதிய வசதிகளையும் இன்ஸ்டாகிராம் நிர்வாகம் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராம் ல் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் குறுகிய வீடியோக்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் ரீல்ஸ் வீடியோவுக்கான புதிய செயலி ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.

இதன் மூலம் டிக்டாக் நிறுவனத்திற்கு போட்டியாக ஒரு செயலியை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் உலகளவில் வீடியோ செயலிகளுக்குள் நம்பர் ஒன் டிக்டாக் தான்.

அந்த வகையில், டிக்டாக் நிறுவனத்திற்கு போட்டியாக ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதற்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் இறங்கியிருக்கிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலி வெளியானால், டிக்டாக் நிறுவனத்திற்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.