ஆரம்பத்தில் மொபைல் போனை அறிமுகப்படுத்திய நோக்கியா தற்போது அந்நிறுவனத்தை பல ஸ்மார்ட்போன் கம்பெனிகள் பின்னுக்கு தள்ளிவிட்டன. இந்த நிலையில் நோக்கியா தற்போது தனது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நோக்கியா அறிமுகம் செய்த லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
நேற்று அதாவது மே 23ஆம் தேதி நோக்கியா C32 என்ற மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.55-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 50MP AI இரட்டை கேமரா அமைப்பு, 5,000mAh பேட்டரி உட்பட பல அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 13 அம்சத்துடன் அறிமுகமாகியுள்ளது.
Nokia C32 இன் சில முக்கிய அம்சங்கள் இதோ:
* 6.55 இன்ச் HD+ டிஸ்ப்ளே
* 50MP AI இரட்டை கேமரா அமைப்பு
* 5,000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13
* 4ஜிபி ரேம்
* 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்ட்ரோரேஜ்
* மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
* 3.5மிமீ ஹெட்போன் ஜாக்
* எஃப்எம் ரேடியோ
* இரட்டை சிம்
* 4G LTE இணைப்பு
* Wi-Fi
* புளூடூத்
* ஜி.பி.எஸ்
* USB Type-C போர்ட்
பெரிய டிஸ்ப்ளே, நல்ல கேமரா மற்றும் நீண்ட கால பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடும் பட்ஜெட் எண்ணம் கொண்டவர்களுக்கு நோக்கியா சி32 ஒரு நல்ல தேர்வாகும்.
நோக்கியா சி32 விலை ரூ. 4 ஜிபி + 64 ஜிபி வகை ரூ.8,999 என்றும், 4ஜிபி + 128ஜிபி வகை ரூ.9,499 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று அழகிய வண்ணங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.