இணையம் இல்லை, NFC இல்லை, QR ஸ்கேன் இல்லை. சாதனங்கள் இடையே ஒலி பரிமாறுதல் முற்றிலும் போதுமானது. ஒலி ஒன்று மட்டும் இருந்தால் போதும், உங்கள் பேமெண்ட் போய்விடும், பண பரிவர்த்தனை முடிந்துவிடும். இது ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவது போல் ஒரு விஞ்ஞான கற்பனை அல்ல. அது தான் ToneTag உருவாக்கிய டெக்னாலஜி.
பத்து ஆண்டுகள் சவால்களுடன் பயணித்த இந்த ஸ்டார்ட்அப், 2024-இல் $78 மில்லியன் Series B2 முதலீட்டை பெற்று வளர்ச்சி பாதையில் ஊக்கமடைந்தது.
இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள்:
ValueQuest SCALE Fund
Iron Pillar
Elevate Inflection Capital LLC
Elevate Innovation Partners (ஏற்கனவே இருந்த முதலீட்டாளர்)
ToneTag தற்போது விரைவில் தனது சேவைகளை ஆசியா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நெடுநிலை இணைய இணைப்பு கொண்ட நாடுகளுக்கு விரிவாக்க திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்டர்நெட் தேவையில்லை என்பதால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கூட பேமென்ட் செய்ய முடியும், வங்கி சேவைகளை எளிதாக்கும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் அனைவரும் பங்கு பெற வாய்ப்பு அளிக்கும்
ToneTag ஒரு புதுமையாக மட்டுமல்ல, ஒரு புரட்சி! இது ஒரு சாதாரண டிஜிட்டல் வாலட் அல்ல. இது வாய்ப்புகளை உருவாக்கும், “ஒலி”யை வழியாக இணைக்கும் நவீன தேசப் பணியாகும். ஒரு சத்தமற்ற சிக்னல், ஆனால் அதில் உலகத்தை மாற்றும் திறன் இருக்கிறது” என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.
ToneTag இந்த பயணத்தை வெற்றிகரமாக தொடர முடிந்தால், அவர்கள் மார்க்கெட்டில் ஒரு பங்கு மட்டுமல்ல, முழு வரைபடத்தை மாற்றிவிடுவார்கள்.