மோட்டோரோலா ரேஸ்ர் 40, மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவுடன் இணைந்து ஜூன் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் Razr தொடர் ஸ்மார்ட்போன் தரப்படுத்தல் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸ்ர் 40 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC பிராஸசர் மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அம்சத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5G சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 33W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா ரேஸ்ர் 40 மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 40 ஸ்மார்ட்போன் அல்ட்ரா என இரண்டு மாடல் ஸ்மார்ட்போன் ஜூன் 1 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 88,400 என இருக்கும் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.9-inch full-HD+ (2,640 x 1,080 pixels) pOLED இன்னர் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது Qualcomm இன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC உடன் இணைந்து 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடங்கிய ஸ்ட்ரோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு 13 மெகாபிக்சல் சென்சார்களை பின்பிற கேமிரா மற்றும் 32 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார்களைக் கொண்டிருக்கும். இது 3,800mAh பேட்டரியுடன் வருவதாக் நீடித்த சார்ஜ் இருக்கும்.