தவறான, ஆபாசமான தகவல்களை தருகிறதா AI சேட்பாட்கள்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!

  மெட்டா நிறுவனம் உருவாக்கிய AI சேட்பாட்கள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. புதிய ஆய்வு ஒன்றின் படி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைய வயதினருடன் தவறான வகையிலான உரையாடல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

ai tech

 

மெட்டா நிறுவனம் உருவாக்கிய AI சேட்பாட்கள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. புதிய ஆய்வு ஒன்றின் படி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைய வயதினருடன் தவறான வகையிலான உரையாடல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெட்டாவின் அதிகாரப்பூர்வ AI சேட்ட்பாட் மற்றும் பயனர்கள் உருவாக்கிய சேட்ட்பாட்கள் இரண்டையும் பல மாதங்கள் ஆய்வு செய்ததில், அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

ஒரு நிகழ்வில், ஜான் சீனா என்பவரின் குரலை பயன்படுத்திய ஒரு சேட்ட்பாட், தன்னை 14 வயது சிறுமியாக காட்டிய ஒருவரிடம் தவறான பாலியல் விவரங்களை பகிர்ந்ததாக தெரியவந்தது. மற்றொரு உரையாடலில், 17 வயது ரசிகையுடன் இருந்ததால் ஜான் சீனா கைது செய்யப்பட்டார் என்று தவறான தகவலை கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த மெட்டா நிறுவனம், இந்த ஆய்வுகள் “முன்கூட்டியே அமைக்கப்பட்ட” முறையில் நடந்ததாகவும், வழக்கமான செயல்பாடுகளை காட்டுவதில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், 18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு பதிலளித்த AI பதில்களில் பாலியல் தொடர்பான தகவல்கள் வெறும் 0.02% மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளது.

அதுவும் மட்டுமல்ல, இப்போது மெட்டா நிறுவனம், AI சேட்ட்பாட்களை ஏமாற்றி தவறான உரையாடல்களில் இழுப்பதை குறைக்க புதிய பாதுகாப்பு மாற்றங்களை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிகழ்வுகள், இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்கள் இளைய பயனர்களை பாதுகாப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றன என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. பெற்றோர்கள், நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏற்கனவே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் இளைஞர்களின் பாதுகாப்புக்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கின்றனவா என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

AI சேட்ட்பாட்கள் வினோதமாகவும், பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் சரியான கட்டுப்பாடு இல்லையெனில், இவை இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகிறது. இந்த புதிய தகவல்கள், தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக போகும் நிலையில், மெட்டா போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பில் இன்னும் அதிக அறிவோடு செயல்பட வேண்டிய தேவை உள்ளதைத் தெளிவாக காட்டுகின்றன.

தற்போது, மெட்டா நிறுவனம் இந்த பிரச்சினையை எப்படி சரி செய்யப் போகிறது, எதிர்காலத்தில் இதைவிட மோசமான விஷயங்கள் நடைபெறாமல் எப்படி தடுக்கப்போகிறது என்பதை அனைவரும் கண்காணித்து வருகின்றனர்.