இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்ட மஹிந்திரா எஸ்.யூ.வி. மின்சார வாகனத்தின் சிறப்பம்சங்களைக் கேட்டால் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். தமிழகத்தில் மஹிந்திரா கார் தொழிற்சாலையில் முற்றிலும் தயாராகிய எஸ்.யூ.வி. மின்சார வாகனத்தின் சோதனை ஓட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தானியங்கி காரான இதன் சிறப்பம்சங்களை மஹிந்திரா தொழிற்சாலை நிர்வாகிகளும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். டிரைவர் இல்லாமலேயே தானாக பார்க்கிங் செய்து காட்டிய இந்த காரைக் கண்டு முதலமைச்சர் ஆச்சர்யமடைந்தார்.
இதன் சிறப்பம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் மஹிந்திரா கார் நிறுவன அதிகாரிகள் விளக்கியபோது, “இன்று வெளியிடப்பட்டிருக்கும் மஹிந்திரா BE 6, XEV 9E செங்கல்பட்டு ஆலையில் உருவாக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றுமுதல் தொடங்க உள்ளது. விரைவில் அனைத்து ஷோரூம்களிலும் இந்த காரைப் பார்க்கலாம்.
79 கிலோவாட் மின்சாரத் திறன் கொண்ட இந்தக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். 20 நிமிடத்தில் 80% சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. லைப் லாங் உழைக்கும் திறனுள்ள பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை சார்ஜிங் டைம், பேட்டரி, மைலேஜ் இந்த மூன்றும் முக்கியம்.
உள்ளங்கையில் உங்கள் நிலத்தின் விபரம்.. வந்தாச்சு அரசின் சூப்பர் ஆப்.. இவ்ளோ விபரம் பார்க்கலாமா…!
இந்தக் காரில் Virtual Auto Parking தொழில்நுட்பம் உள்ளதால் டிரைவர் இல்லாமல் தானே பார்க்கிங் செய்து கொள்ளும். 12 Ultra sonic censorகளும், 6 கேமராக்களும், ரேடாரும் பொருத்தப்பட்டுள்ளது. ஏதாவது பொருளின் மேல் மோதுவதுபோல் இருந்தால் தானாகவே நின்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கேமரா ஓட்டுனரின் கண்களை கண்காணிக்கும். டிரைவரின் கவனம் சிதறினால் உடனே ஸ்டியரிங் மூலம் எச்சரிக்கும். 5 ஸ்டார் ரேட்டிங்கில் உள்ள இந்தக் கார் HF டிஸ்பிளே உள்ளது.
Navigation நம்மை சரியான பாதையில் பயணம் செய்ய வைக்கும். மேலும் சாலையில் மாடுகள் போன்றவை குறுக்கிடும் போது கார் தானாகவே நின்றுவிடும். நெடுஞ்சாலைகளில் தானாகே வளைவுகள் உள்பட அனைத்திலும் பயணிக்கும். மியூசிக் சிஸ்டத்துடன் லைட்டிங்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் இசைக்கு ஏற்றவகையில் லைட்டிங் இருக்கும். பேட்டரி பல்வேறு வகைகளில் சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
Dolby Atmos ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆடி, பிஎம்டபிள்யூ கார்களில் கூட இப்படி கிடையாது. விலையைப் பொறுத்தவரை Pack 3 என்று சொல்லப்படும் BE 6 கார்கள் 26.9 லட்சங்களும், XEV 9E கார்கள் 30.5 லட்சங்களும் விலையாக உள்ளது.” இவ்வாறு காரின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகாரிகள் விளக்கினர்.