இயந்திரங்களின் கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞான உலகின் அசுர வளர்ச்சி என்றாலும், அது மனிதர்களை மிகவும் சோம்பேறியாக்கி வருகிறது. வீடு பெருக்க மிஷின், மாவு ஆட்ட மிஷின், துணி துவைக்க மிஷின் என அனைத்திற்கும் மிஷின்கள் வந்து மனிதர்களின் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றி வருகிறது. இதனால் உடல் உழைப்பு இன்றி மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
இருப்பினும் சிலர் உடற்பயிற்சிகள் செய்து உடலை மிகவும் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்கின்றனர். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தம் வாழ்க்கை முறையுடன் இயந்திரங்கள் ஒன்றிப் போய் விட்டது. மேலும் ரோபோக்ககளின் கண்டுபிடிப்பும் மனிதர்களின் வேலையை இன்னும் எளிமையாக்குகின்றன.
பல் துலக்குவதற்குக் கூட எலக்ட்ரிக் பிரஷ்கள் வந்துவிட்ட நிலையில் தற்போது மற்றும் ஓர் அம்சமாக குளித்து விடுவதற்கு என்று தனியாக மிஷின் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள். என்னடா இது..! இந்த ஒரு வேலைதான் நம்ம கை காலை அசைத்துச் செய்கிறோம் இப்போ இதற்கும் ஆப்பு வச்சுட்டாங்களா என்று எண்ணத் தோன்றுவது போல் உடலை தேய்த்துக் குளிப்பாட்ட மிஷின் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட Grok இப்போது அனைவருக்கும்.. எலான் மஸ்க் அறிவிப்பு..!
ஜப்பான் நாட்டின் Science Co என்ற நிறுவனம் உடலைச் சுத்தமாக்கும் Wash Out என்ற இயந்திரத்தினைக் கண்டுபிடித்துள்ளது. ஒரு சிறிய அறை போல் உள்ள இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று நாம் படுத்துக் கொண்டால் போதும் இதமான அளவு நீர் நிரப்பப்பட்டு சிறிய குமிழ்களுடன் நீர் வேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படும். அதன்பின் இந்தக் குமிழ்கள் உடையும் போது உடல் அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்படும்.
சுமார் 15 நிமிடங்களில் மனிதர்களைக் குளிப்பாட்டி காய வைத்து விடும் இந்த அதிநவீன மிஷின். தற்போது கண்காட்சிகளில் இந்த மிஷினானது வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. உடலைச் சுத்தப்படும் இந்த Human Washing Machine தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.