இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நீளமா இருக்கிறதா? வந்துவிட்டது இனி ஓட்டி ஓட்டி பார்க்கு வசதி..!

  பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் ஒரு வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் முழுமையாக காத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்ட இடத்தில் மட்டும் பார்த்துவிட்டு, அடுத்த வீடியோவுக்கு சென்று விடலாம். ஆனால்,…

Instagram

 

பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் ஒரு வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் முழுமையாக காத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்ட இடத்தில் மட்டும் பார்த்துவிட்டு, அடுத்த வீடியோவுக்கு சென்று விடலாம்.

ஆனால், இன்ஸ்டாகிராமை பொருத்தவரை, ஒரு வீடியோவின் இறுதிக் காட்சியை பார்க்க வேண்டும் என்றால், நாம் பொறுமையாக அந்த வீடியோ முடியும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதை ஓட்டி ஓட்டி பார்க்கும் வசதி இன்ஸ்டாகிராமில் இல்லை. ஆனால் தற்போது இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ஸ்டாகிராமில் ரீல்களை இரண்டு மடங்கு வேகத்தில் பார்ப்பதற்கான புதிய அம்சம் வர இருப்பதாக இன்ஸ்டாகிராம் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், நீண்ட ரீல்ஸ் வீடியோக்களை முழுவதுமாக பொறுமையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்ட இடங்களில் மட்டும் பார்ப்பதற்காக, நாம் வேகமாக பார்க்கும் வசதியை இன்ஸ்டாகிராம் வழங்க உள்ளது.

ஸ்கிரீனில் உள்ள ஏதாவது ஒரு பக்கத்தில் கை வைத்து அழுத்தினால் போதும்; அந்த வீடியோ, சாதாரணமாக இயங்குவதை விட, இரண்டு மடங்கு வேகமாக இயங்கும். எனவே, நீளமான ரீல்ஸ் வீடியோக்களை குறைந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அம்சம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும், கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோவை எடிட் செய்யும் வசதியும் வந்துவிட்டது. இது ரீல்ஸ் பதிவு செய்பவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். ஒரு ரீல்ஸை பதிவு செய்துவிட்டு, அதை தேவையான அளவு எடிட் செய்து கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு எடிட்டிங் சாப்ட்வேர் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அப்டேட்டுகளால், இன்ஸ்டாகிராம் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.