இன்று ஒரே நாளில் இணையத்தில் பயன்படுத்தப்படும் பல முக்கிய செயலிகள் டவுன் ஆகி இருப்பது பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கூகுள் பே உள்பட யு.பி.ஐ. சேவைகள் சரியாக இயங்கவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், அதனை அடுத்து சில மணி நேரத்தில்இ ன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவை முடங்கியதாக கூறப்பட்டது.
தற்போது, இதனை அடுத்து சில மணி நேரங்களுக்கு முன்பு சாட் ஜிபிடி செயலியும் இயங்கவில்லை என்றும், சாட் ஜிபிடியில் என்ன கேட்டாலும் எரர் மெசேஜ் வருவதாகவும் பயனர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக எக்ஸ் தளத்திற்கு வந்து தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர் என்றும், “இந்த ஒரு தளமாவது பிரச்சனை இல்லாமல் இயங்குகிறதே” என்று பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக முன்னணி செயலிகள் அடிக்கடி திடீர் திடீரென முடங்குவது ஹேக்கர்களின் செயலாக இருக்குமா, அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த விளக்கத்தையும் அளிக்காமல் இருப்பதும் பயனர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் செயலிகள் முடங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், நிறுவனங்கள் தங்களுடைய செயலிகளை தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பயனர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
