இந்தியாவின் AI டெக்னாலஜி வளர்ச்சியில் ஒரு பெரும் மைல்கல்லாக ஐஐடி மெட்ராஸ் Ziroh Labs என்ற கலிஃபோர்னியா ஸ்டார்ட்அப் மற்றும் IITM Pravartak Technologies Foundation ஆகியவற்றுடன் இணைந்து Centre of AI Research (CoAIR) என்ற புதிய மையத்தை நிறுவியுள்ளனர்.
இந்த கூட்டணியின் முக்கிய அடையாளமாக, ‘Kompact AI’ என்ற புதிய AI தளத்தை அறிமுகப்படுயுள்ளனர். இது, GPU போன்ற உயர்மதிப்புள்ள ஹார்டுவேர் தேவையின்றி, சாதாரண CPU-களில் அடிப்படை AI மாடல்களை இயக்கக்கூடிய வசதியை வழங்குகிறது.
Ziroh Labs உருவாக்கிய Kompact AI, Meta-வின் Llama 2, Alibaba-வின் Qwen2.5, DeepSeek போன்ற பெரிய மொழி மாதிரிகளை கூட ஒரு Intel Xeon போன்ற சாதாரண சிப்களில் இயங்கச் செய்கிறது. இதற்கு GPU தேவையில்லை என்பதால் அலுவலக கணினிகளில் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம், இந்தியாவின் “AI for All” என்ற குறிக்கோளை நோக்கி ஒரு பெரிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
இணையதளத் தேவையின்றி, ஃபிளட்லாக இயங்கக்கூடிய இந்த தளத்தை Ziroh Labs, நெடுநாள் ஆய்வுகளுக்கு பிறகு வெளியிட்டுள்ளது. இத்துடன் 17 பெரிய AI மாடல்களை Kompact AI மூலம் இயக்குவது சாத்தியமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
Intel, AMD போன்ற பலவகை சிப்களில் இது சோதிக்கப்பட்டு பல்வேறு கணினிகளில் இயங்கும் திறனை உறுதி செய்கிறது.
தற்போதைய நிலைமையில் NVIDIA போன்ற நிறுவனங்களின் GPU-கள் ₹10 முதல் ₹20 லட்சம் வரை மதிப்புடையவை. மேலும், உலகளாவிய தேவை காரணமாக அவை பெரும்பாலும் கிடைக்கவில்லை.
இதனால், பல இந்திய ஸ்டார்ட்அப்புகள் AI தொழில்நுட்பங்களை அணுக முடியாமல் இருந்தன. Kompact AI இந்த தடைகளை உடைக்கிறது. குறிப்பாக Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வரம் என்று கூறப்படுகிறது.
IIT மெட்ராஸ் மற்றும் Ziroh Labs இணைந்து உருவாக்கிய இந்த Centre of AI Research, இந்தியாவை உலக அளவில் AI தொழில்நுட்பத்தில் தலைநிமிர்ந்து நிற்க செய்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த அம்சம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அதாவது பட்டிதொட்டியெங்கும் AI டெக்னாலஜியை பயன்படுத்த அதிகம் வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது.