இதன் காரணமாக, விளம்பரங்கள், லோகோக்கள் உள்பட பல்வேறு இமேஜ்களை உருவாக்கி வந்த கிராபிக்ஸ் டிசைனர்கள், ஒட்டுமொத்தமாக வேலையை இழந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சின்ன சின்ன லோகோக்கள், படங்கள் மட்டுமின்றி, எவ்வளவு பெரிய நிறுவனத்திற்கும் இந்த இமேஜ் ஜெனரேட்டர் தேவையான படங்களை வடிவமைத்து கொடுக்கிறது. இதனால், “கிராபிக் டிசைனர்” என்ற பதவி எதிர்காலத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், இன்னும் மனித உணர்வு மற்றும் உள்நோக்க சிந்தனை கொண்ட சில கிராபிக்ஸ் டிசைனர்கள் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களுக்கும் வேலை வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இமேஜ் ஜெனரேட்டர் மட்டுமின்றி, வீடியோ ஜெனரேட்டரும் இப்போது வந்துவிட்டது. AI என்ற செயற்கை நுண்ணறிவின் படைப்பாற்றல் தொழில்நுட்பம், உலகின் பல வேலை வாய்ப்புகளை தட்டி பறித்து விட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இதனை அடுத்து, செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு, மனித குலத்திற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.