போட்டோ கொடுத்தால் வீடியோ கிடைக்கும்… prompt கொடுத்தால் குறும்படம் கிடைக்கும்.. கூகுள் ஜெமினி AI தரும் அசத்தல் அம்சம்..!

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி AI ஏற்கனவே அட்டகாசமான பல அப்டேட்டுக்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது சாதாரண புகைப்படங்களை டைனமிக் வீடியோக்களாக மாற்றும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் காட்சிகளுக்கு அனிமேஷன்…

gemini ai

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி AI ஏற்கனவே அட்டகாசமான பல அப்டேட்டுக்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது சாதாரண புகைப்படங்களை டைனமிக் வீடியோக்களாக மாற்றும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் காட்சிகளுக்கு அனிமேஷன் சேர்க்கலாம், ஒலிகளை இணைக்கலாம், மேலும் வெறும் சில prompt மூலம் தங்கள் கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கலாம்.

இந்த அம்சம், ஜெமினி தளத்தில் உள்ள ‘Videos’ விருப்பத்தின் கீழ் கிடைக்கும். இதில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி காட்சியை விவரிக்க வேண்டும். மேலும் ஆடியோ குறிப்புகளையும் குறிப்பிட்டால் அதன் பிறகு, ஜெமினியின் AI உங்கள் விளக்கத்தின் அடிப்படையில் ஒரு வீடியோவை உருவாக்கும். அது காற்றில் மெதுவாக அசையும் ஒரு அமைதியான நிலப்பரப்பாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் வரைபடம் ஒரு குறும்பட அனிமேஷனாக மாறினாலும் சரி, எல்லாமே இனிமேல் சாத்தியம்!

இந்த வசதி கதை சொல்ல மற்றும் கருத்துக்கள் சொல்ல, ஒரு தொழில்நுட்ப வசதியை வீடியோவாக சொல்ல பயனர்களை மேலும் ஊக்குவிக்கிறது. உங்கள் காபி கோப்பை நடனமாட வேண்டுமா? ஒரு குடும்ப புகைப்படத்தில் ஒருவர் மட்டும் கண் சிமிட்டி புன்னகைக்க வேண்டுமா? இப்போது இவை அனைத்துமே சாத்தியம்.

இந்த புகைப்படம்-வீடியோ அம்சமானது (photo-to-video feature), கூகுள் AI Pro மற்றும் Ultra சந்தாதாரர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கிடைக்கும். நீங்கள் இப்போது gemini.google.com என்ற இணையதளத்தில் இதை முயற்சி செய்யலாம். இந்த வசதி மூலம் ஒரு குறும்படம் கூட உருவாக்கலாம்.

வீடியோ உருவாக்கப்பட்டதும், பயனர்கள் அதை முன்னோட்டமிடலாம், பகிரலாம் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப பதிவிறக்கலாம் இதற்கு எந்த எடிட்டிங் திறன்களும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.