இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. இணைகிறது ஆண்ட்ராய்டு, ChromeOS.. கூகுள் அறிவிப்பால் டெஸ்க்டாப் பயனர்கள் மகிழ்ச்சி..!

கூகுள் நிறுவனம் தனது இரண்டு இயங்குதளங்களான ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ChromeOS (ChromeOS) இரண்டையும் ஒரே ஒருங்கிணைந்த தளமாக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கூகுளின் ஆண்ட்ராய்டு எக்கோசிஸ்டம் தலைவர் சமீர்…

chrome

கூகுள் நிறுவனம் தனது இரண்டு இயங்குதளங்களான ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ChromeOS (ChromeOS) இரண்டையும் ஒரே ஒருங்கிணைந்த தளமாக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கூகுளின் ஆண்ட்ராய்டு எக்கோசிஸ்டம் தலைவர் சமீர் சமத் ஒரு நேர்காணலில் வெளியிட்டார். கூகுளின் ஒரு மூத்த நிர்வாகி இந்த இணைப்பு குறித்து பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.

தொழில்நுட்ப ஜாம்பவானின் மென்பொருள் உத்தியை எளிதாக்குவதற்கும், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் முழுவதும் ஒரு சீரான அனுபவத்தை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு என்பது கூகுளின் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இயங்குதளம், குறிப்பாக மொபைல் சாதனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ChromeOS, Chromebook-களை இயக்குகிறது, இவை பெரும்பாலும் பள்ளிகளில் குறைந்த செலவில் பயன்படுத்த விரும்புபவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கூகுள் ஏன் இதைச் செய்கிறது?
கூகுள் இந்த இரண்டு இயங்குதளங்களையும் ஏன் இணைக்கிறது என்றால் பயனர்கள் அனுபவத்தை சீராக மாற்றுவதும் ஆண்ட்ராய்டுக்கு ஒரு பெரிய பின்னணி அமைப்பு இருந்தாலும், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் போன்ற பெரிய திரைகளுக்கு இது சரியாக பொருந்தவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் ChromeOS சிறந்த விண்டோ மேலாண்மை மற்றும் பிரவுசிங் அனுபவத்தை வழங்குவதால் இந்த இரண்டையும் இணைத்துவிட்டால் மொபைல்ல் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களுக்கு ஒரே மாதிரியான அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறது.

இரண்டு அமைப்புகளையும் ஒன்றாக கொண்டுவருவது, அனைத்து சாதன வகைகளிலும் சிறப்பாக செயல்படும் ஒரு ஒற்றை தளத்தை உருவாக்க கூகுளுக்கு உதவும். இது டெவலப்பர்களுக்கும் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் முழுவதும் செயல்படும் ஆப்களை உருவாக்க எளிதாக்கும், இரண்டு வெவ்வேறு தளங்களுக்கு அவற்றை மாற்றியமைக்க தேவையில்லை.

ChromeOS-Android இணைப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது
இந்த ஒருங்கிணைப்பு செயல்முறை 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது, அப்போதே கூகுள் ChromeOS ஐ ஆண்ட்ராய்டின் தொழில்நுட்ப அடித்தளத்தில், ஆண்ட்ராய்டு கர்னல் உட்பட, இயங்க மாற்ற தொடங்கிவிட்டது. இந்த தொழில்நுட்ப மாற்றம், சாதனங்கள் முழுவதும் புதிய AI அம்சங்களை மிகவும் திறமையாக வெளியிட கூகுளுக்கு உதவுகிறது. நீண்ட கால நோக்கில், இந்த இணைப்பு ஜெமினி போன்ற மேம்பட்ட AI கருவிகளை Chromebook-கள் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கும் கொண்டு வரக்கூடும்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது
ஆண்ட்ராய்டு மற்றும் ChromeOS ஐ ஒன்றிணைப்பது பற்றிய பேச்சுக்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்ளன. உண்மையில், இந்த யோசனை 2013 ஆம் ஆண்டிலேயே முதலில் முன்வைக்கப்பட்டது, மேலும் ஒரு முழு இணைப்பு 2015 ஆம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கூகுள் Chromebook-கள் ஆண்ட்ராய்டு ஆப்களை இயக்க அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்தியது. காலப்போக்கில், இந்த அணுகுமுறைக்கு வரம்புகள் இருப்பது தெளிவாகியது. பல ஆண்ட்ராய்டு ஆப்கள் Chromebook-களில் சிறப்பாக செயல்படவில்லை, குறிப்பாக மவுஸ் மற்றும் கீபோர்டுடன் பயன்படுத்தும்போது. சில ஆப்கள் மிக சிறியதாக தோன்றின, அருகருகே பார்க்கும் வசதியை ஆதரிக்கவில்லை, அல்லது கிளிக்குகளுக்கு தவறான பதிலளித்தன. எனவே தான் இந்த இணைப்பு தேவை என்பது முடிவு செய்யப்பட்டது.