Google Pixel 9a இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ள நிலையில், இது மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நேர்த்தியான வடிவமைப்பு, சிறப்பான ஹார்ட்வேர் கொண்டதோடு, நேர்த்தியான விலையிலும் கிடைக்கிறது.
Google Pixel 9a ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED திரை, மேம்படுத்தப்பட்ட 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் Tensor G4 சிப் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த அம்சங்கள் சமீபத்தில் அறிமுகமான iPhone 16e-யை விட இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது என விமர்சனங்கள் வருகின்றன.
Pixel 9a மற்றும் iPhone 16e ஆகிய இரண்டு போன்களின் ஒப்பீட்டை தற்போது பார்ப்போம்.
ஸ்க்ரீன்: Pixel 9a 6.3 இன்ச் OLED திரையுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும், அதிகபட்சமாக 2700 nits பிரைட்னஸையும் கொண்டுள்ளது. அதேபோல் iPhone 16e வெறும் 60Hz LCD திரையுடன் வருகிறது என்பதை கவனிக்க வேண்டும்
கேமரா அமைப்பு: iPhone 16e-யில் ஒரு கேமரா மட்டுமே பின்புறத்தில் இருக்கும் நிலையில், Pixel 9a 48 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமராவுடன் வருகிறது.
AI வசதிகள்: Tensor G4 சிப் மூலம் Pixel 9a, Pixel 9 Pro ஸ்மார்ட்போன்கள் AI அம்சங்களை கொண்டுள்ளது. iPhone 16e-யில் Apple Intelligence வசதி இருந்தாலும், Google-ன் AI திறன் அதைவிட பல மடங்கு மேம்பட்டது.
மேலும் Pixel 9a Iris, வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. IP68 தரச்சான்று, தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பு, 5100mAh பெரிய பேட்டரி, ஒரே சார்ஜில் 30 மணி நேரம் செயல்படும் தன்மை, 7 ஆண்டுகள் OS அப்டேட்கள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் Pixel 9a ₹49,999 என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியாகிறது. இது ஏப்ரல் மாதம் முதல் ஷோரூம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.