கூகுள் அறிமுகம் செய்துள்ள நோட்புக்.. இத்தனை சிறப்பம்சங்களா?

By Bala Siva

Published:

Google NotebookLM: கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிற நிலையில், தற்போது மேலும் ஒரு அம்சமாக கூகுள் நோட்புக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏஐ டெக்னாலஜி மூலம் இயங்கும் இந்த கூகுள் நோட்புக் தற்பொழுது சில புதிய சிறப்பு அம்சங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பயனர்கள் தங்களது PDF பைல், டாக்குமென்ட்கள், வலைதள முகவரிகள் ஆகியவற்றை இந்த கூகுள் நோட்புக் மூலம், அதில் உள்ள முக்கிய உள்ளடக்கங்களை மட்டும் சுருக்கமாக பெற முடியும். இது ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது புதிய அம்சமாக யூடியூப் லிங்குகளை அப்லோட் செய்யலாம். அவ்வாறு அப்லோட் செய்யப்பட்ட யூடியூப் உள்ளடக்கம் மிகவும் சுருக்கமாக இந்த நோட்புக் வழங்குகிறது. இதன் மூலம், யூடியூபில் உள்ள கருத்துக்களை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நோட்புக்கை உருவாக்குவதற்கான  https://notebooklm.google.com/ இணையதள முகவரியில், நாம் எதை சுருக்கமாகப் பெற வேண்டுமோ, அந்த பைல்களை அப்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு, ‘சம்மரி’ என்பதை ஜெனரேட் செய்தால், ஆடியோ, வீடியோ, இணையதளம் போன்ற எந்த அம்சமாக இருந்தாலும், அதை சுருக்கமாக பெற்றுக் கொள்ளலாம். இதனை கூகுள் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தலாம் என்பதால், இந்த நோட்புக் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.