இந்நிலையில், AI டெக்னாலஜி துறையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போட்டி காரணமாக, கூகுள் தனது ஜெமினியில் கூடுதல் அம்சங்களை இணைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, Project Astra என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Project Astra – லைவ் வீடியோ & ஸ்கிரீன் பகிர்வு அம்சமாகும். இந்த புதிய அம்சத்தில் லைவ் வீடியோ மற்றும் ஸ்கிரீன் பகிர்வு ஆகியவை உள்ளன. இது ஒரு மேம்பட்ட AI அமைப்பு என்றும், இது சாதாரணமாக கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமின்றி, நீங்கள் இருக்கும் சூழ்நிலையையும் புரிந்து கொண்டு தகவல் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
உதாரணமாக உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் ஏதாவது ஒரு பொருள் அல்லது இடத்தை பார்க்கிறீர்களா? உடனடியாக ஜெமினியுடன் ஸ்கிரீன் பகிருங்கள், அது என்ன விஷயம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து தரும்.
மேலும் இதுவரை உள்ள அனைத்து AI தொழில்நுட்பங்களும் கேள்வி-பதில் அளிக்கும் முறையில் இருந்தன. ஆனால், இந்த புதிய அம்சத்தில், ஜெமினியுடன் விவாதிக்கலாம். விரிவான விளக்கங்களை கேட்டு பெறலாம்.
உங்கள் மொபைல் செட்டிங்ஸில் குழப்பம் இருந்தால், ஜெமினி லைவ் ஸ்கிரீனை பகிருங்கள். எந்த வசதிக்கு எந்த அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டால், அது உடனே பதில் தரும்.
வீட்டில் சமையல் அல்லது ஏதேனும் வேலையை செய்ய முயன்றால், கேமராவை இயக்கி Astra-வை நீங்கள் பார்க்கும்படி செய்யலாம். Astra அதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு வேலைக்கு வழிகாட்டும்.
இந்த புதிய வசதியை எப்படிப் பயன்படுத்தலாம்?
Android-இல் Gemini Live-ஐ திறந்தால், “Share screen with Live” என்பதை அழுத்தி அதைக் கிளிக் செய்தால், உங்கள் ஸ்கிரீன் பகிரப்பட்டு, Gemini உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். அல்லது “Video Mode” என்ற முறையைத் தேர்ந்தெடுத்து, Astra-வை உங்கள் சுற்றுச்சூழலை உண்மையாக புரிந்து கொள்ளச் செய்யலாம்.