Google Chrome யூஸ் பண்ணாதீங்க.. மத்திய அரசு எச்சரிக்கையால் பயனர்கள் அதிர்ச்சி..!

  CERT-In எனப்படும் இந்திய கணினி அவசர பாதுகாப்பு பதிலளிப்பு குழு Windows லேப்டாப்புகளில் Google Chrome-இல் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த குறைபாடுகள்ஹேக்கர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக…

chrome

 

CERT-In எனப்படும் இந்திய கணினி அவசர பாதுகாப்பு பதிலளிப்பு குழு Windows லேப்டாப்புகளில் Google Chrome-இல் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த குறைபாடுகள்ஹேக்கர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. Google Chrome பயனர்கள் உடனடியாக அவர்களின் பிரவுசரை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Google Chrome-இன் Windows பதிப்பில் 134.0.6998.177/.178 க்கும் முந்தைய பதிப்புகளில் இந்த பாதுகாப்பு குறைபாடு காணப்படுகிறது. இது, ஹேக்கர்கள் ஹேக் செய்து ஆபத்து விளைவிக்க வகையில் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, அனைத்து Google பயனர்களும் உடனடியாக Chrome-இன் புதிய பதிப்பிற்கு மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Google Chrome-ஐ டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட பயனர்களுக்கும் இதுவொரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்டேட் செய்யாமல் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரை தொலைவில் இருந்தே ஹேக் செய்து அனைத்து டேட்டாக்களையும் திருட முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே CERT-In குழுவின் அறிவிப்பின்படி, இந்த பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய Google Chrome-இன் புதிய பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும். இதை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

உங்கள் கணினியில் Google Chrome பிரவுசரை ஓப்பன் செய்து மேல்புற வலதுபுறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் “Help” பிரிவில் சென்று, பிறகு “About Google Chrome” என்பதை கிளிக் செய்யவும். அதில் Chrome அப்டேட் குறித்த தகவல் இருக்கும். அப்டேட் முடிந்த பிறகு, “Relaunch” பட்டனை அழுத்தவும். தற்போது உங்கள் பிரவுசர் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருக்கும்.