கூகுள் Chrome பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. உடனே என்ன செய்ய வேண்டும்?

  கூகுள் Chrome பயனர்கள் அவசரமாக தங்கள் பிரவுசரை புதுப்பிக்க வேண்டும் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் ஹேக்கர்கள் கையில் சிக்க வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் Chrome பிரவுசரில் பல அதிக…

chrome

 

கூகுள் Chrome பயனர்கள் அவசரமாக தங்கள் பிரவுசரை புதுப்பிக்க வேண்டும் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் ஹேக்கர்கள் கையில் சிக்க வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் Chrome பிரவுசரில் பல அதிக ஆபத்துள்ள பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும்,  அதனால் ஹேக்கர்கள் மிக எளிதாக கம்ப்யூட்டரை ஹேக் செய்து முடக்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய கணினி அவசரகால எதிர்வினை குழு (CERT-In) இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனே கூகுள் Chrome பிரவுசரை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுள் Chrome-ல் கண்டறியப்பட்டுள்ள குறைகள் என்னென்ன என பார்த்தால், ‘V8 (JavaScript engine), PDFium (PDF கோப்புகளை கையாளும் நிரல்)
Media (ஒலி/ஒளி செயலாக்கம்) மற்றும்  Developer Tools-ல் உள்ள தவறான அணுகல் கட்டுப்பாடு, Profiles-ல் உள்ள நினைவக மேலாண்மை பிழைகள், மற்றும் Media Stream, Permission Prompts-ல் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என தெரிகிறது.

இந்த குறைபாடுகளால்  ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்து டேட்டாக்களை திருடலாம், கம்ப்யூட்டரை முடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க உடனே பழைய Chrome பதிப்புகளை பயன்படுத்தும் பயனர்கள் உடனே புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் Chrome-ஐ புதுப்பிக்கும் முறை என்னவெனில் முதலில் Chrome-ஐ திறந்து Settings > About Chrome செல்லவும். பிரவுசர் புதுப்பிப்புகளை சரிபார்த்து, புதிய பதிப்பை நிறுவும். புதுப்பிப்பு முடிந்ததும், ரீஸ்டார்ட் செய்யவும்.