கோடிக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது வந்துவிட்டது.. அனுமதி கொடுத்துவிட்டது கூகுள்.. இனி ஆண்ட்ராய்டு – ஐபோன்களுக்கு இடையே ஃபைல்களை பகிரலாம்.. அதே தரம், சுருக்கப்படாத வீடியோ இனி கிடைக்கும்..

பல ஆண்டுகளாக, மொபைல் போன் பயன்படுத்து கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களுக்கு இடையில் கோப்புகளை பகிர்வது குறித்த வசதிக்கு கூகுள் அனுமதி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆண்ட்ராய்டு போன்கள்…

android apple

பல ஆண்டுகளாக, மொபைல் போன் பயன்படுத்து கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களுக்கு இடையில் கோப்புகளை பகிர்வது குறித்த வசதிக்கு கூகுள் அனுமதி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களுக்கு இடையில் கோப்புகளை பரிமாற்றம் செய்ய குறுஞ்செய்தி பயன்பாடுகளை நாட வேண்டியிருந்தது, அப்போது புகைப்படங்களின் தரம் குறைந்தது, வீடியோக்கள் சுருக்கப்பட்டன. இந்த குறைபாடு இப்போது நீங்குகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்கள் இப்போது நேரடியாக கோப்புகளை பகிர முடியும் என்று கூகிள் அறிவித்துள்ளது. இதற்கு காரணம், குயிக் ஷேர் (Quick Share) என்ற விரைவு பகிர்வு அமைப்பு, ஆப்பிளின் ஏர்டிராப் (AirDrop) உடன் இணைந்து செயல்பட அனுமதிக்கும் புதிய வசதி ஆகும். இந்த வசதி முதலில் பிக்சல் 10 போன்களில் வழங்கப்பட இருக்கிறது.

புகைப்படங்கள், ஆவணங்கள் அல்லது கோப்புகள் போன்ற எதையும் பகிர்வது இனி மிக எளிமையாக இருக்கும். ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து இன்னொரு ஆண்ட்ராய்டு சாதனத்தில் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் அதே வழியில், இப்போது ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐபோன்களுக்கு கோப்புகளை அனுப்ப முடியும்.

இந்த அம்சம் வலுவான பாதுகாப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூகுள் உறுதியளித்துள்ளது. கோப்பு பரிமாற்றங்கள் பாதுகாக்கப்படும் என்றும், மேலும் இந்த அமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டதாகவும், எனவே பயனர்கள் டேட்டா தனிப்பட்டதாகவே இருக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த வசதி முதன்முதலில் பிக்சல் 10 தொடர் சாதனங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அந்த சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் கிராஸ்-எக்கோசிஸ்டம் (cross-ecosystem) பகிர்வின் முதல் அனுபவத்தை பெறலாம். மேலும் பல ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரைவில் இந்த வசதி கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.