இன்னும் சில நாட்களில், அழைப்பு வந்தால் வலது புறம் ஸ்வைப் செய்ய வேண்டும் என்றும், அழைப்பை நிராகரிக்க வேண்டும் என்றால் இடது புறம் ஸ்வைப் செய்ய வேண்டும் என்றும் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் கிராமத்தினர் கூட, மேலே ஸ்வைப் செய்தால் அழைப்பு ஏற்றுக்கொள்ளலாம், கீழே ஸ்வைப் செய்தால் நிராகரிக்கலாம் என்பதைக் கண்டறிந்த நிலையில், எதற்காக இந்த திடீர் மாற்றம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அவ்வப்போது மாற்றம் செய்யப்பட வேண்டியதாலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துமா அல்லது வசதியாக இருக்குமா என்பது, இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்ட பிறகு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, கூகுள் ஆண்ட்ராய்டுகளில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப் போவதாகவும், பாதுகாப்பை அதிகரிக்க ஏராளமான பாதுகாப்பற்ற ஆண்ட்ராய்டு செயலிகளை நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.