டிரெண்டில் இருக்கும் Ghibli   இமேஜ்கள்.. ChatGPTயில் பெறுவது எப்படி?

  சமூக வலைத்தளங்களில் அனிமேஷன் இமேஜ்கள் என்று சொல்லப்படும் ஸ்டூடியோ ஜிப்ளி பாணியில் உருவாக்கப்பட்ட வண்ணமயமான படங்கள் வைரலாகி வருகிறது. X, Instagram போன்ற தளங்களில் கண்கவரும் மாடல்களில், பளிச்சென்ற கலைப்பாணியில் உருவாக்கப்படுகிறது. இந்த…

Ghibli image

 

சமூக வலைத்தளங்களில் அனிமேஷன் இமேஜ்கள் என்று சொல்லப்படும் ஸ்டூடியோ ஜிப்ளி பாணியில் உருவாக்கப்பட்ட வண்ணமயமான படங்கள் வைரலாகி வருகிறது. X, Instagram போன்ற தளங்களில் கண்கவரும் மாடல்களில், பளிச்சென்ற கலைப்பாணியில் உருவாக்கப்படுகிறது. இந்த இமேஜ்கள் டிரெண்டிற்கு காரணம், GPT-4o-வால் இயக்கப்படும் ChatGPT-இன் புதிய AI பட உருவாக்கி. இதன் மூலம் யாரும் எளிதாக Ghibli பாணியில் கலை படைக்க முடிகிறது. இதோ, உங்களுக்கே தேவையான ஜிப்ளி-ஸ்டைல் படங்களை இலவசமாக உருவாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

ChatGPT-யை பயன்படுத்தி Ghibli பாணி படங்களை உருவாக்குவதற்கு முதலில்
OpenAI  GPT-4o இமேஜ் ஜெனரேட்டர் வசதியை பெற்றிருக்க வேண்டும். இதை Plus, Pro, Team, Free பயனர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

ChatGPT ஓப்பன் செய்து,  இமேஜ் உருவாக்கம் என்பதை கிளிக் செய்யவும், பின்னர்  Prompt bar-இல் உள்ள மூன்று புள்ளிகள் (⋮) ஐ கிளிக் செய்து, Image மற்றும் Canvas என்ற இரண்டு விருப்பங்களை காணலாம்.

“Image” என்ற முறை தேர்வு செய்யவும். இதன்மூலம் ChatGPT இமேஜ் உருவாக்க இயல்பு முறையை செயலில் கொண்டு வரும். உங்கள் Prompt விவரத்தை பதிவு செய்யவும். உதாரணமாக ஒரு பசுமையான கிராமத்து சூழலில், ஒரு பெரும் டோடரோ  மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டுள்ளது, பனி படர்ந்த இரவில் பூச்சிகள் ஒளிருகிறது என்று கொடுத்து உங்கள் படத்தை உருவாக்கவும் என கட்டளையிடவும். உடனே ChatGPT உங்கள் விவரத்தை பகுப்பாய்வு செய்து, 1 நிமிடத்திற்குள் படம் உருவாக்கும். அதன்பின்னர் அந்த இமேஜை டவுன்லோடு செய்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிரலாம்.

ChatGPT மட்டுமல்ல, எலோன் மஸ்க்கின் Grok AI-யும் Ghibli பாணியில் படங்களை உருவாக்க உதவுகிறது. ChatGPTயில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகளை Grokல் பின்பற்றி இமேஜ்களை பெற்று கொள்ளலாம்.