கடந்த சில நாட்களாக Ghibli புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏராளமான சமூக வலைதள பயனர்கள் இந்த புகைப்படங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு முன்பு சாதாரண புகைப்படங்களை ChatGPT உள்ளிட்ட ஏஐ டெக்னாலஜி செயலிகள் உருவாக்கி கொடுத்த நிலையில், தற்போது திடீரென Ghibli புகைப்படங்களுக்கு அதிகமான தேவை உருவாகியுள்ளது. தினமும் கோடிக்கணக்கான பயனர்கள் Ghibli புகைப்படங்களை கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியபோது, “எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. இணையம் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு தூக்கமே இல்லை. Ghibli புகைப்படங்கள் பற்றிய கோரிக்கைகள் ஏராளமாக வருகின்றன. இப்படி இயங்கினால் எங்கள் GPU உருகிவிடும்!” என்று அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.
“எல்லோரும் Ghibli புகைப்படங்கள் உருவாக்குவதை தயவுசெய்து குறைக்க முடியுமா? எங்கள் குழுவினர் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். எங்களால் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்க முடியவில்லை!” என்று அவர் புலம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ghibli புகைப்படங்களுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ள நிலையில், ChatGPT மூலம் தினமும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் திடீரென இந்த புகைப்படங்களை ரசிக்க தொடங்கி விட்டார்கள். இந்த சேவையை மேம்படுத்தி புதிய மாற்றங்கள் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
