Ghibli இமேஜ் மட்டுமல்ல, வீடியோவும் உருவாக்கலாம்.. ChatGPT, Python இருந்தால் போதும்..!

  Ghibli இமேஜ் தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிலையில் தற்போது ChatGPT, Ghibli வீடியோவையும் உருவாக்கும் வழியை உருவாக்கியுள்ளது. OpenAI-யின் பிரீமியம் AI வீடியோ கருவி Sora பணம் செலுத்திய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்…

Ghibli

 

Ghibli இமேஜ் தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிலையில் தற்போது ChatGPT, Ghibli வீடியோவையும் உருவாக்கும் வழியை உருவாக்கியுள்ளது.

OpenAI-யின் பிரீமியம் AI வீடியோ கருவி Sora பணம் செலுத்திய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலையில் ஒரு Reddit பயனர், Ghibli பாணியில் AI வீடியோக்களை இலவசமாக உருவாக்க ஒரு புத்திசாலி வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். இந்த முறையில், ChatGPT மற்றும் Python ஆகியவற்றை இணைத்து, frame-by-frame animation உருவாக்கப்படுகிறது.

Ghibli பாணியில் உருவாக்கப்பட்ட AI படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. OpenAI-யின் GPT-4o தொழில்நுட்பம், AI படங்களை அதிகமாக கவர்ச்சியாகவும் நுட்பமானதாகவும் உருவாக்கி உள்ளது. கூடுதலாக, OpenAI CEO ஆல்ட்மேன் கூட தனது ப்ரொஃபைல் புகைப்படத்தை Ghibli பாணியில் மாற்றியுள்ளார்.

ChatGPT Plus சந்தாதாரர்களுக்கு மாதம் $20 கட்டணத்தில் Sora வீடியோ உருவாக்கக் வசதி கிடைக்கிறது. இதனால், பலர் இதற்குப் பிறகு மாற்று வழிகளை தேடத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு Reddit பயனர் ChatGPTஐ பயன்படுத்தி Ghibli பாணியில் சிறு வீடியோக்களை உருவாக்க ஸ்டெப்-பை-ஸ்டெப் முறையை பகிர்ந்துள்ளார். அது எப்படி என்பதை பார்ப்போம்.

ChatGPT-யின் இமேஜ் மற்றும் Python ஆகிய இரண்டு வசதிகளும் உங்களிடம் இருந்தால் இந்த வீடியோவை உருவாக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் Ghibli பாணி இமேஜ்களை உருவாக்கவும். அதாவது பிராம்ப்ட் மூலம் குறைந்தது 10 Ghibli இமேஜ்களை உருவாக்கவும். ஒரு கேரக்டரை உருவாக்க அந்த கேரக்டரை ஒவ்வொரு ஃப்ரேமாக உருவாக்கவும். அதன்பின் Python மூலம் 5 FPS MP4 வீடியோவாக இணைக்கவும்.ChatGPTயின் அனைத்து ஃப்ரேம்களையும் உருவாக்கி, அவற்றை வீடியோவாக மாற்றிய பிறகு, இறுதியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

காப்பிரைட்ஸ் பிரச்சனை வருமா?

ChatGPT, நம் புகைப்படங்களை அல்லது விளக்க உரைகளை பயன்படுத்தி Ghibli பாணியில் இமேஜ்களை உருவாக்கி தருகிறது. ஆனால், AI-யின் படைப்புகள் காப்பிரைட் மற்றும் அசல் படைப்புகளுக்கான உரிமை தொடர்பான சிக்கல்களை எழுப்பலாம். எனவே, இந்த தொழில்நுட்பம் பின்னாளில் எந்தவித பிரச்சனையை எழுப்பும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.