ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது புதிய பிரீமியம் மெம்பர்ஷிப் திட்டமான ‘ப்ளிப்கார்ட் பிளாக்’ (Flipkart BLACK)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் கட்டணம் மற்றும் காலம்: இந்த மெம்பர்ஷிப் திட்டத்தின் கட்டணம் ரூ.1499. இது, சந்தா செலுத்திய நாளிலிருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். அறிமுக சலுகையாக, இது ரூ.990-க்கு வழங்கப்படுகிறது.
ரத்து செய்தல்: சந்தாவை ரத்து செய்யவோ அல்லது பணத்தை திரும்பப் பெறவோ முடியாது.
சூப்பர்காயின்ஸ்: ஒவ்வொரு ஆர்டருக்கும் 5% சூப்பர்காயின்ஸ் கேஷ்பேக் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 800 சூப்பர்காயின்கள் வரை பயனர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், சூப்பர்காயின்களை பயன்படுத்தி ஒவ்வொரு ஆர்டருக்கும் 5% கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
யூடியூப் பிரீமியம்: ஒரு வருடத்திற்கான யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். விளம்பரங்கள் இல்லாத வீடியோக்கள், பின்னணியில் இயக்கும் வசதி, பாடல்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதி போன்றவற்றை இதன் மூலம் பெறலாம்.
பிளாக் டீல்கள்: பிரீமியம் பொருட்கள் மற்றும் பிராண்டுகளுக்குக்கூடுதல் பிரத்யேக சலுகைகள் கிடைக்கும்.
முன்னுரிமை அணுகல்: முக்கிய விற்பனை நிகழ்வுகளுக்கு ஒரு நாள் முன்னதாகவே பொருட்கள் வாங்கலாம். மேலும், வங்கி சலுகைகளிலும் 15% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
வாடிக்கையாளர் சேவை: 24 மணி நேரமும் முன்னுரிமை அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை கிடைக்கும். காத்திருக்க தேவையில்லை.
கிளியர்ட்ரிப் சலுகை: கிளியர்ட்ரிப் செயலியில் விமான டிக்கெட் ரத்து மற்றும் மீண்டும் திட்டமிடுவதற்கு வெறும் 1 ரூபாயில் இந்த சேவையை பெறலாம்.
ஏற்கெனவே ப்ளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) உறுப்பினர்கள், ரூ.1499 செலுத்தி இந்த திட்டத்திற்கு மாறலாம். ஆனால், பிளாக் மெம்பர்ஷிப் எடுத்த பிறகு பிளஸ் திட்டத்தின் சலுகைகள் கிடைக்காது. இந்த மெம்பர்ஷிப் குறித்து சந்தேகம் இருந்தால், ப்ளிப்கார்ட் ‘Help Center’ பிரிவில் உள்ள பிரத்யேக வாடிக்கையாளர் சேவை பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
