இந்த ஜெனரேஷன் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்..! குழந்தைகளுக்காக தனி Grok வடிவமைக்கும் எலான் மஸ்க்..

எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் விரைவில் குழந்தைகளுக்கான Grok AI பதிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெற்றோரின் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் இந்த புதிய மேம்பாட்டை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் ‘பேபி Grok செயலி’…

baby grok

எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் விரைவில் குழந்தைகளுக்கான Grok AI பதிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெற்றோரின் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் இந்த புதிய மேம்பாட்டை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் ‘பேபி Grok செயலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக உருவாகி வரும் Grok AI சாட்பாட், மேலும் பலரை ஈர்க்கவும், Grok மற்றும் அதன் பிரீமியம் அம்சமான Grok 4 AI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் குழந்தைகளுக்கென ஒரு குறிப்பிட்ட Grok அம்சத்தை உருவாக்க எலான் திட்டமிட்டுள்ளார்.

Grok க்ரோக் AI அம்சத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

மஸ்க்கின் பதிவில், ‘பேபி Grok AI’ என்பது இளம் பார்வையாளர்களையும், தங்கள் குழந்தைகளை AI-ஐ ஏதேனும் ஒரு வடிவத்தில் அனுபவிக்க அனுமதிக்க விரும்பும் பெற்றோர்களையும் ஈர்க்க முயற்சிக்கும் என கூறுகிறார்.

குழந்தைகளுக்கான Grok புதிய பதிப்பு, வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை வழங்கும். தங்கள் குழந்தைகள் AI-ஐ எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், திரை நேர ஒழுங்குமுறைகளில் இருந்து விலகி செல்லாமல் இருப்பதையும் பெற்றோர்களுக்கு கட்டுப்படுத்த இந்த செயலி உதவும்.

வரும் நாட்களில் Grok க்ரோக் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, குழந்தை மையப்படுத்தப்பட்ட AI சாட்பாட் என்பது ஒட்டுமொத்த திட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி மக்கள் விருப்பத்தை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் Grok 4 AI சாட்பாட், ‘அனி’ என்ற பெயரில் அனிமேஷன் வடிவில் ஒரு புதிய AI அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மெய்நிகர் கதாபாத்திரம் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும், மேலும் உரையாடல்களில் ஆழமாக சென்று, AI உடன் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. Her போன்ற திரைப்படங்களில் AI துணைகளை பார்த்திருப்போம். இப்போது மஸ்க் சமீபத்திய Grok AI பதிப்பின் உதவியுடன் அவற்றை மக்கள் வாழ்வில் உண்மையாக மாற்றுகிறார்.

இந்த AI துணை, மாதாந்திர கட்டணத்துடன் வரும் புதிய சூப்பர் க்ரோக் பிரீமியம் சந்தாவின் ஒரு பகுதியாகும். AI சாட்பாட்களின் பயன்பாடு சிக்கலான கேள்விகளை கேட்பது மற்றும் சிக்கல்களை தீர்ப்பது என்பதை தாண்டி சென்றுவிட்டது. மக்கள் இப்போது AI உடன் விஷயங்களை மேலும் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். Grok ‘அனி’ அதை மக்களுக்கு வழங்க வந்துள்ளது.