மொபைலை போலவே லேப்டாப், கம்ப்யூட்டரிலும் Qualcomm-ன் X2 செயலி.. கம்ப்யூட்டர் சந்தையில் ஒரு புதிய புரட்சி.. X2 Elite மற்றும் X2 Elite Extreme பற்றி தெரிந்து கொள்வோமா?

ஸ்மார்ட்போன் சிப்செட் உலகில் கொடிகட்டி பறந்த ஸ்னாப்டிராகன் (Snapdragon), தற்போது லேப்டாப் மற்றும் AI PC சந்தையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில், Qualcomm நிறுவனம் X2…

snap dragon

ஸ்மார்ட்போன் சிப்செட் உலகில் கொடிகட்டி பறந்த ஸ்னாப்டிராகன் (Snapdragon), தற்போது லேப்டாப் மற்றும் AI PC சந்தையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில், Qualcomm நிறுவனம் X2 Elite மற்றும் X2 Elite Extreme ஆகிய புதிய தலைமுறை சிப்செட்களை அறிமுகப்படுத்தியது.

“எலைட் (Elite) போதாதா, அதற்கு மேல் எக்ஸ்ட்ரீம் (Extreme) தேவையா?” என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,

“ஸ்னாப்டிராகன் X என்பது லேப்டாப் தயாரிப்புகளுக்கான பிராண்ட் பெயர். இதில், Elite என்பது எங்கள் முதன்மை தயாரிப்பாகும். சந்தையில் X Elite-ஐ அறிமுகமானபோது, அது தொழில்துறையையே மாற்றியது. இப்போது, அடுத்த தலைமுறைக்காக (Gen 2) Snapdragon X2 Elite அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பயனர்களிடம் இருந்து வந்த கருத்துக்களின் அடிப்படையில், அதைவிட அதிக செயல்திறனை விரும்பும் ஒரு குறிப்பிட்ட வகை பயனர்களுக்கு மேலும் சிறந்த ஒன்றை கொடுப்பது தான் , X2 Elite Extreme என்பதாகும்.

இதை ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் Elite என்பது ‘Pro’ போன்றது, Elite Extreme என்பது ‘Pro Max’ போன்றது. எனவே, Elite என்பது சந்தையில் முன்னணியில் இருப்பதற்கான தரத்தை அமைக்கிறது என்றால், Extreme என்பது தேவைப்படுபவர்களுக்கு மிக உச்சபட்ச செயல்திறனை கொடுக்கிறது.

CPU செயல்திறன்: சிங்கிள்-திரெட் (Single-thread) மற்றும் மல்டி-திரெட் (Multi-thread) செயல்திறனில் முந்தைய தலைமுறையை விட 40% முதல் 50% வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

கிராபிக்ஸ் (Graphics): கிராபிக்ஸ் திறன்களில் கிட்டத்தட்ட 2 மடங்கு மேம்பாடு.

AI திறன் (NPU): ஆன்போர்டு (On-device) AI திறனை 45 TOPS-ல் இருந்து 80 TOPS ஆக உயர்த்தியுள்ளது. இது AI செயல்திறனில் 78% முதல் 80% வரையிலான முன்னேற்றத்தை குறிக்கிறது.

பேட்டரி ஆயுள்: இவ்வளவு பெரிய செயல்திறன் மேம்பாடுகளுடன், பேட்டரி ஆயுளையும் பாதுகாப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

AI PC என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். AI PC என்ற புதிய சொல் குறித்து பலருக்கும் இருக்கும் குழப்பத்தை தெளிய வைக்கும் எளிமையாம விளக்கம் இதோ.

“Qualcomm-க்கு சிப்பில் AI சேர்ப்பது புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்களில் AI எஞ்சின் ஒருங்கிணைத்து தான் வருகிறது. உதாரணமாக, உங்கள் கேமராவில் நீங்கள் ஒரு போர்ட்ரெய்ட் மங்கல் படத்தை எடுக்கும்போது, பின்னணியில் AI தான் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தை இப்போது லேப்டாப்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பின்னணியில் தொடர்ந்து இயங்கி, உங்கள் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும்.

உதாரணங்கள்:

1. மைக்ரோசாஃப்ட் கோபைலட் பிளஸ் (Microsoft Copilot Plus): விண்டோஸில் உள்ள சுமார் 40 AI பயன்பாடுகள், Qualcomm-ன் NPU மூலம் இயங்கி, செயல்திறனை அதிகரிக்கும்.

2. அடோப் சூட் (Adobe Suite): ஃபோட்டோஷாப், லைட்ரூம் போன்ற அடோப் செயலிகள் ஸ்னாப்டிராகனில் இயங்குவதுடன், சிப்செட்டின் NPU-வை பயன்படுத்தி தங்கள் அம்சங்களின் தரத்தை மேம்படுத்தும்.”

சுருக்கமாக, AI PC என்பது சிப்பிலேயே AI திறனை கொண்டிருப்பதால், அது உங்கள் அன்றாட பணிகளை வேகமாகவும், சிறப்பாகவும், அதிக பேட்டரி ஆயுளுடனும் செய்து முடிக்க உதவுகிறது.

Qualcomm-ன் இந்த முன்னேற்றத்தில் இந்திய தொழில்நுட்பத் திறமை எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறது என்ற கேள்விக்கு Dishi Sakar, Qualcomm நிறுவனத்தின் நேதன் பதிலளித்தார்.

இந்த X2 Elite கட்டமைப்பு உலகளாவிய முயற்சியாக இருந்தாலும், இந்தியாவில் எங்களிடம் நம்பமுடியாத திறமை குழு உள்ளது. பெங்களூரில் வடிவமைப்பு மையங்கள், ஹைதராபாத்தில் மென்பொருள் குழுக்கள் உள்ளன. இந்த புதிய தளத்தின் வடிவமைப்பு கூறுகளில் பல இந்திய குழுக்களில் இருந்து உருவானவை. இது ஒரு உலகளாவிய சிப்பாக இருந்தாலும், இந்திய திறமை முக்கியப் பங்கு வகிக்கிறது.”

இந்தியச் சந்தை குறித்து பேசிய நேதன், “இந்தியா எங்களுக்கு ஒரு முக்கிய சந்தை. இன்று நீங்கள் கடையில் சென்று ஸ்னாப்டிராகன் சாதனத்தை வாங்கலாம். எங்கள் சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் அதன் பேட்டரி ஆயுள், குளிர்ச்சியான செயல்பாடு மற்றும் செயல்திறன் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்திய வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்,” என்று கூறினார்.

ஸ்னாப்டிராகன் மொபைல் சந்தையில் செய்தது போலவே, லேப்டாப் சந்தையிலும் தன்னை ஒரு முதன்மை பிராண்டாக நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது தெளிவாகிறது.