வல்லவனுக்கு வல்லவன் .. DeepSeek AI செயலியை அடித்து நொறுக்கிய சீன ஏஐ நிறுவனம்..!

  கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாக DeepSeek AI, சாட் ஜிபிடி உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது DeepSeek AI தொழில்நுட்பத்தை…

tencent

 

கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாக DeepSeek AI, சாட் ஜிபிடி உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது DeepSeek AI தொழில்நுட்பத்தை அதே சீனாவில் இருக்கும் இன்னொரு நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதில் இருந்து வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளது என்பது உண்மையாகிறது.

Tencent என்ற சீன நிறுவனத்தின் AI சாட்பாட்  தற்போது சீனாவின் iOS ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக உள்ளது. இது DeepSeek AI சாட்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Tencent நிறுவனத்தின் Yuanbao என்ற ஏஐ தொழில்நுட்பம்  சீனாவின் மிகப்பெரிய சமூக ஊடக பயன்பாடான வீசாட் பயனர்களை கவர்ந்துள்ளதால், இதுவரை இந்த செயலியை 1.3 பில்லியன் பயனர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

Tencent தற்போது அலிபாபா, பய்டு, பைடான்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட AI தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த வாரம், “Hunyuan Turbo S” என்ற புதிய AI மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது டீப் சீக்கை விட வேகமாக செயல்படுகிறது என Tencent கூறுகிறது.

பய்டு நிறுவனம் வரும் ஏப்ரல் 1 முதல் அதன் Ernie 4.5 AI மாடலை வெளியிட உள்ளது. அதேபோல் பைடான்ஸ் நிறுவனமும் புதிய AI ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.