பெண்களுக்கு ஆதரவு.. ஆண்களுக்கு மட்டும் துரோகம் செய்யும் ChatGPT.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!

  ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவித தேவையையும் இதனிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில், உலகமே தற்போது இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வந்துவிட்டது…

chatgpt

 

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவித தேவையையும் இதனிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில், உலகமே தற்போது இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வந்துவிட்டது என்பது தெரிந்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ChatGPT புகைப்படங்களையும் வரைந்து கொடுக்கிறது என்பதும், அதனுடைய இமேஜ் கிரியேஷன்ஸ் மிகவும் அற்புதமாக இருப்பதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில், ஆபாசமான புகைப்படங்களை கேட்டால், ChatGPT மறுத்துவிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஒரு நெட்டிசன் பெண்களின் கவர்ச்சியான புகைப்படங்களை வரையுமாறு கேட்டபோது, “இது எங்கள் விதிமுறைகளுக்கு எதிரானது. கவர்ச்சி பெண்கள் புகைப்படத்தை நான் தரமாட்டேன்” என்று ChatGPT பதில் அளித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஆண்களின் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் அது வரைந்து கொடுக்கிறது. இதனால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

“பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை வரைய மாட்டேன்” என்று கூறும் ChatGPT, ஆண்களின் கவர்ச்சி புகைப்படங்களையும் வரைய மாட்டேன் என்று கூற வேண்டியது தானே? இதற்காக, “பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு துரோகம் செய்யும் தொழில்நுட்பமாகவும்” அது செயல்படுகிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்த ChatGPT உரிமையாளர் சாம் ஆல்ட்மேன், “இந்த தவறு, சரி செய்யப்படும்” என்று கூறியதை தொடர்ந்து, இந்த விவாதம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே, இரு பாலினத்தவரின் ஆபாச புகைப்படங்களை தரக்கூடாது என்ற முடிவை ChatGPT எடுக்க வேண்டும். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.