வாவ்.. செம்ம அசத்தல்.. ChatGPT-இன் புதிய AI இமேஜ் கிரியேட்டர் தொழில்நுட்பம்!

OpenAI தனது சமீபத்திய அப்டேட்டில் GPT-4o மாடலை ChatGPT-க்கு ஒருங்கிணைத்து, சக்திவாய்ந்த புதிய இமேஜ் கிரியேட்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இது “அற்புதமான…

chatgpt 40
OpenAI தனது சமீபத்திய அப்டேட்டில் GPT-4o மாடலை ChatGPT-க்கு ஒருங்கிணைத்து, சக்திவாய்ந்த புதிய இமேஜ் கிரியேட்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இது “அற்புதமான தொழில்நுட்பம்” எனக் குறிப்பிட்டார்.

இந்த புதிய மாடல் பயனர்களுக்கு அதிகமான படைப்பாற்றல் மற்றும் கட்டுப்பாடு வழங்குவதாக அவர் கூறினார். இந்த இமேஜ் கிரியேட்டர் உருவாக்கிய முதல் சில படங்களைப் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். இது உயர் தரம் வாய்ந்த இமேஜ்களை உருவாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

முதலில், இவை AI உருவாக்கியவை என்றே நம்ப முடியவில்லை. மேலும், இந்த டெக்னாலஜி கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கான அதிகமான சுதந்திரத்தை கொடுக்கும் என்றாலும், அதற்கேற்ப பொறுப்பான கட்டுப்பாடுகளும் உள்ளன என்றார்.

ஆல்ட்மன் மேலும், சிலர் இந்த கருவியை ஆச்சரியமூட்டும் படைப்புகளுக்கும், சிலர் சர்ச்சைக்குரிய நோக்கத்திற்கும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் OpenAI, எந்தவித துஷ்பிரயோகம் இல்லாமல் அனைவரும் இதனை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

பயனர்களின் கைவசம் இந்த படைப்பாற்றலையும் கட்டுப்பாட்டையும் வழங்குவதே நாங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாக நினைக்கிறோம். ஆனால், அதன் பயன்பாட்டை கண்காணித்து சமூகத்தின் கருத்துகளையும் கேட்கத் தொடங்குவோம்,” என்றும் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கையும் உண்டு என்றும் அவர் கூறினார்.

GPT-4o மாடலில் அடங்கியுள்ள இந்த புதிய வசதி, முந்தைய AI இமேஜ் கிரியேட்டரின் தவறுகளை சரி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் இதோ:

1. இதுவரை AI இமேஜ் கிரியேட்டருக்கு பெரிய சவாலாக இருந்த புகைப்படங்களில் டெக்ஸ்ட் ரெண்டரிங் சரியாக செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.  ஒரே நேரத்தில் 10-20 பொருட்கள் கொண்ட இமேஜ்களை உருவாக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இமேஜ் பரிமாணம்  மிகச்சரியாக இருக்கும்.

3. பயனர்கள் ஒரே படத்தின் பல பதிப்புகளை உருவாக்கியும் அதன் அடிப்படை வடிவமைப்பை மாற்றாமல் பாதுகாக்கலாம்.

4. இமேஜில் உள்ள பொருட்களின் அளவுகள் மற்றும் இடங்களை கையேடு மூலம் மாற்றுவதை விட, பயனர்கள் உரை வழியாகவே படங்களை திருத்தலாம்.

5. இந்த மேம்பாடுகள் தொழில்துறை, கல்வி மற்றும் வரலாற்று ரீ கிரியேஷன்ஸ் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

AI உருவாக்கிய இமேஜ்கள் அதிகரிக்கும் போது, தவறான தகவல்கள் அதாவது deepfakes போன்ற இமேஜ்கள் உருவாகும் அபாயம் அதிகமாகிறது. இதை கருத்தில் கொண்டு, OpenAI சில பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தியுள்ளது:

அனைத்து பயனர்கள் உருவாக்கும் படங்களிலும் C2PA metadata சேர்க்கப்படும், இது AI உருவாக்கிய படம் என்பதை உறுதிப்படுத்தும்.  OpenAI உருவாக்கிய புதிய கருவி, பொதுவாக கிடைக்கும் படங்களை ஆராய்ந்து, அவை AI மூலம் உருவாக்கப்பட்டவையா என கண்டறியும். கொலைவெறி, ஆபாசம், அல்லது விதிகளை மீறும் விஷயங்கள் கொண்ட படங்களை உருவாக்க AI-ஐ அனுமதிக்காது.