இதனால் இதுவரை இலவச பயனர்கள் ChatGPTயில் தங்கள் கற்பனைக்கு ஏற்ற இமேஜ்களை உருவாக்கி, அதனை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வந்தனர். மேலும், தொழில்முறையாகவும் சில இமேஜ்கள் உருவாக்கப்பட்டது.
ஆனால் இனிமேல் இலவச பயனர்கள் வாட்டர் மார்க்குடன் தான் இமேஜ்களை பெறுவார்கள் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ChatGPT இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ஜிப்ளி பாணி இமேஜ்கள் உட்பட, அனைத்து படங்களையும் இலவச பயனர்கள் வாட்டர் மார்க்குடன் டவுன்லோட் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ChatGPT சில சலுகைகளையும் தங்கள் பயனர்களுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, கனடா உள்பட சில நாடுகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ChatGPTயை இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்க போவதாகவும் கூறப்படுகிறது. எனவே அமெரிக்கா மற்றும் கனடா கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 130 மில்லியன் பயனர்கள் ChatGPTயை பயன்படுத்தி வரும் நிலையில், எத்தனை புதிய ஏஅஒ தொழில்நுட்பங்கள் வந்தாலும் ChatGPT க்கு டிமாண்ட் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது.