ChatGPT மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்டுகள்: அதிர்ச்சி தகவல்..!

  ChatGPT மூலம் இமேஜ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இவை கொடுக்கும் இமேஜ்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி…

aadhar

 

ChatGPT மூலம் இமேஜ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இவை கொடுக்கும் இமேஜ்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி ஆதார் கார்டுகள், போலி பான் கார்டுகள், போலி பில்கள், போலி ரசீதுகள் உள்ளிட்ட பல போலியான ஆவணங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய போலி ஆதார் கார்டுகளும், க்யூஆர் குறியீடும் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன. இதன் மூலம், போலி ஆதார் கார்டுகளை ஜாக்கி பிடி மூலம் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால், நாங்கள் ஓபன் ஏஐயை சோதித்தபோது, ChatGPT நேரடியாக ஆதார் கார்டுகளை உருவாக்க மறுத்தது. ஆனால் கல்வி நோக்கத்திற்காக மாதிரி கார்டுகளை உருவாக்க ஒப்புக்கொண்டதாக சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். அவ்வாறு உருவாக்கப்பட்ட கார்டுகளில், மாணவர் அல்லது மாணவியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ChatGPT மூலம் போலி ஆதார் கார்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மிகச் சுலபமாக ஆதார் மற்றும் பான் கார்டுகளை பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.