OpenAI நிறுவனம் வெகுவிரைவில் சில குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த AI ஏஜென்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ChatGPT உருவாக்கிய AI ஏஜென்டுகளுக்காக மாதம் $20,000 வரை கட்டணமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,41,000 ஆகும். மேலும், இந்த சேவைகள் OpenAI-யின் தற்போதைய சந்தா திட்டங்களில் அடங்காது என்பதும், தனிப்பட்ட சேவையாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது..
OpenAI நிறுவனம், மூன்று விதமான AI ஏஜென்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த மூன்று வகை ஏஜென்ட்டுகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
1. உயர்தர அறிவு கொண்ட வருமான ஏஜென்ட்: இந்த AI ஏஜென்ட், மூலோபாய திட்டமிடல் (strategic planning), விமர்சன சிந்தனை (critical thinking), மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் (decision-making) போன்ற பணிகளை செய்யும்.
இதற்கான மாத கட்டணம் சுமார் ரூ.1,74,000
2. சாப்ட்வேர் டெவலப்பர் AI ஏஜென்ட்: இந்த AI ஏஜென்ட், கோடிங் (coding), பிழைத்திருத்தம் (debugging), பிழை நீக்கம் (bug fixing), மற்றும் code deployment போன்ற பணிகளை செய்யும். இதற்கான மாத கட்டணம் ரூ.8,07,000
3. PhD-நிலை ஆராய்ச்சியாளர் AI ஏஜென்ட்: இந்த AI ஏஜென்ட், மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆழ்ந்த பகுப்பாய்வு செய்யும் திறன்களை கொண்டதாக இருக்கும். இதற்கான மாத சந்தா ரூ.17,41,000. இந்த ஏஜென்ட், ஆழமான பகுப்பாய்வு (deep analysis) மற்றும் ஆராய்ச்சி உருவகிப்பை (research simulation) மேற்கொள்ளும் வகையில் இருக்கும்.
இந்த மூன்று AI ஏஜென்ட்டுகளும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.