ஒரு மொபைல் போனுக்கு சார்ஜ் மற்றும் இன்டர்நெட் இணைப்பு ஆகிய இரண்டும் மிகவும் அத்தியாவசியம் என்று கூறப்படும் நிலையில் இந்த இரண்டும் இல்லாமல் புதிய மொபைல் போனை எலான் மஸ்க் தயாரித்து வெளியிட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு துறைகளில் நம்பர் ஒன்னாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் மொபைல் தயாரிப்பு நிறுவனத் தொழிலில் ஈடுபட இருப்பதாகவும் மற்ற நிறுவனங்களின் மொபைல் போன் இல்லாமல் எலான் மாஸ்க் நிறுவனம் தயாரிக்கும் மொபைல் போன் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த மொபைல் போனை பயன்படுத்துவதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்று கூறப்படுகிறது ஸ்டார்லிங்க் சேட்டிலைட் உடன் இந்த மொபைல் போன் இணைக்கப்படும் என்றும் எனவே இன்டர்நெட் இல்லாமல் இணையத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த மொபைல் போன் சோலார் எனர்ஜி வசதியை பெற்று இருப்பதால் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சார்ஜ் இல்லாத நேரத்தில் ஆட்டோமேட்டிக்காக சோலார் எனர்ஜி மூலம் இந்த மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ளும் என்றும் எனவே சார்ஜ் பிரச்சனை இந்த மொபைல்போனுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த புதிய மொபைல் போன் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் இந்த மொபைல் போன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எலான் மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை என்றும் ஆனால் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் இது குறித்து அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.