பொதுவாக, ஹேக்கர்கள் சமூக வலைதளங்களை தான் குறி வைப்பார்கள் என்று கருதப்படும் நிலையில், தற்போது இமேஜ் எடிட்டிங் இணையதளமான Canva ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக X, Snapchat உள்ளிட்ட சில சமூக வலைதளங்கள் முடங்கிய நிலையில், அதை ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிரபல இமேஜ் எடிட்டிங் இணையதளமான Canva திடீரென முடங்கியதாகவும், இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, அமெரிக்க பயனர்களுக்கு தான் பெரும் சிக்கல் ஏற்பட்டதாகவும், பயனர்கள் இணையதளத்தில் உள்ளே செல்லவோ, இமேஜ்களை எடிட் செய்யவோ முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். Downdetector இணையதளத்தில் பலர் Canvaவில் எந்த பணியையும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
32% பயனர்களுக்கு சர்வர் இணைப்பு கோளாறு ஏற்பட்டதாகவும், 5% பயனர்களுக்கு செயல்பாடு தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோளாறு காரணமாக Canva தளத்தை திறக்கவே முடியவில்லை என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் Canva இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வழங்கவில்லை. மேலும், எப்போது முழுமையாக சரியாகும் என்பதற்கான தகவலும் இல்லை.
ஏராளமான X பயனர்கள் தங்களது ஆதங்கத்தை புகாராக பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் இந்த பிரச்சனை பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது.