ஆப்பிள் ஐபோனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? என்பதை தற்போது பார்ப்போம்,
முதலில் உங்கள் ஐபோனை iOS 18.1-க்கு மேல் புதுப்பிக்கவும். பின்னர் Settings > General > Software Update என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சாதனம் புதிய பதிப்பில் இயங்குகிறதா என்று சரிபார்க்கவும்.
அதன்பின்னர் Settings > Apps > Phone என்பதில் சென்று Call Recording விருப்பத்தை அழுத்தவும். நீங்கள் ஒரு அழைப்பை மேற்கொள்ளும்போது அல்லது பெறும்போது உங்கள் ஐபோன் ஸ்கிரீன் இடது புற மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும். அதை தொட்டால், பதிவு தொடங்கும்.
அழைப்பு முடிவடைந்தவுடன் பதிவு தானாகவே Notes செயலியில் சேமிக்கப்படும். ஒருவேளை ரெக்கார்டிங்கை நிறுத்த விரும்பினால், Stop Recording பொத்தானைத் தொட்டால் போதும்
அதன்பின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அழைப்புகளையும் Notes செயலியில் சென்றால் அதனை பார்க்கலாம். அதன் பின் Notes செயலியை திறக்கவும். Call Recordings என்ற கோப்புக்கு சென்று ஒரு பதிவைத் தேர்ந்தெடுத்து, ஒலியை கேட்கலாம். மேலும் உரையாடலின் சுருக்கத்தை டெக்ஸ்ட் ஆகவும் பார்க்கலாம்.