இதுவரை செல்போன் டவரே இல்லாத இந்திய கிராமத்திற்கு சென்றது ஏர்டெல்.. 2 கிராமங்களுக்கு செல்போன் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை.. இனி சுற்றுலா வருமானம் குவியும் என தகவல்..!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் லடாக்கின் கிழக்கு எல்லையில் உள்ள மிகவும் தொலைதூர கிராமங்களான மான் (Man) மற்றும் மேரக் (Merak) ஆகியவற்றுக்கு முதன்முதலில் செல்போன் இணைப்பை வழங்கி வரலாற்று…

airtel

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் லடாக்கின் கிழக்கு எல்லையில் உள்ள மிகவும் தொலைதூர கிராமங்களான மான் (Man) மற்றும் மேரக் (Merak) ஆகியவற்றுக்கு முதன்முதலில் செல்போன் இணைப்பை வழங்கி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்த இரண்டு கிராமங்களும் புகழ்பெற்ற பாங்காங் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த அதிமுக்கிய பகுதியில் செல்போன் சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.

லடாக்கின் கிழக்கு எல்லை பகுதியானது, பல ஆண்டுகளாக தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், பெரும் பிரச்சினையை சந்தித்து வந்தது. குறிப்பாக, இந்த பகுதியில் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு எந்தவிதமான செல்போன் சேவையும் இல்லாமல் இருந்தது.

ஏர்டெல் வழங்கியுள்ள இந்த இணைப்பு, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயன் அளிப்பதுடன், பாங்காங் ஏரியை சுற்றியுள்ள இந்த தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும். இந்த சேவை விரிவாக்கத்தை தொடர்ந்து, சுஷூல் (Chushul) மற்றும் பாங்காங் ஏரி வரையிலான முழு பயண பாதையும் இப்போது அலைபேசி இணைப்பை பெற்றுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திப்யேந்து ஐச் இது குறித்து பேசுகையில், “இந்தியாவின் மிகவும் தொலைதூர பகுதிகளுக்கு உலக தரத்திலான டிஜிட்டல் அணுகலை வழங்கும் எங்கள் இலக்கில், மான் மற்றும் மேரக்கை இணைத்திருப்பது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்” என்று கூறினார்.

மேலும் “இந்தச் சாவடிகள் ஒவ்வொரு ஆண்டும் பாங்காங் ஏரிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதுடன், டிஜிட்டல் கட்டணங்கள், அவசர தொடர்பு மற்றும் அன்றாட டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும்” என்று தெரிவித்தார்.

அதிக உயரமான மற்றும் மிகவும் தொலைதூர பகுதிகளில் ஏர்டெல் தொடர்ந்து செய்து வரும் விரிவாக்கம், இணைப்பு இடைவெளியை குறைப்பதில் அசைக்க முடியாத உறுதியைக் காட்டுகிறது. மிகவும் சவாலான சூழல்களிலும் கூட, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நம்பகமான செல்போன் சேவைகளை வழங்கவும் ஏர்டெல் உறுதியாக செயல்படுகிறது.

இந்த புதிய இணைப்பு, லடாக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் குறிப்பாக எல்லைப் பகுதி என்பதால் ஒரு முக்கியப் படிக்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.