ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதை அடுத்து, இனி ஏர்டெல் சந்தாதாரர்கள் ஆப்பிள் டிவி வீடியோ மற்றும் ஆப்பிள் மியூசிக்கை கேட்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பாரதி ஏர்டெல் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளன. இதன்படி, ஏர்டெல் வைஃபை கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் ₹999 என்ற கட்டணத்துடன் திட்டத்தை தேர்வு செய்தால், ஆப்பிள் டிவியின் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.
ஆப்பிள் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலகளாவிய ஆப்பிள் இசையையும் ஆறு மாத இலவச ஆப்பிள் மியூசிக் சந்தாவுடன் கேட்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக, இனி ஏர்டெல் சந்தாதாரர்கள் ஆப்பிள் டிவியில் உள்ள தொடர்கள், நகைச்சுவை தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கலாம்.
அது மட்டுமின்றி, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் உள்பட பல மொழிகளில் ஆப்பிள் மியூசிக் கேட்டு மகிழலாம். இந்த வசதி அனைத்து போஸ்ட் பேய்டு பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் உலகளவில் பிரபலமானவை என்பதோடு, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.