செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது. ஆனால், மனிதர்களைப் போல சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் உருவாக்க முடியுமா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியே என அவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மனிதர்களைப் போல சிந்திக்கவும், கற்கவும், எந்த ஒரு பணியையும் செய்யவும், உடனடியாக முடிவு எடுக்கவும் செயற்கை நுண்ணறிவால் முடியாது. மனிதன் கொடுக்கும் கட்டளைகளை மட்டுமே செய்யும் தன்மை உடையது AI ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இந்த கருவிகள் மெதுவாக மேம்பட தொடங்கும். எப்படியாக இருந்தாலும் மனிதனே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவன் என்றும் அவர் தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தால் கதை எழுதலாம், கட்டுரை எழுதலாம், சதுரங்கம் விளையாடலாம், ஒரு மனிதன் செய்யக்கூடிய பல விஷயங்களை செய்யலாம். ஆனால் அதே நேரத்தில், சிக்கல் தீர்க்கும் திறன், தர்க்கம் செய்வது, சிந்தனை செய்வது, புதிய சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது ஆகியவை இன்னும் மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களாக உள்ளன.
AI அசாதாரண திறமைகளை பெற்றிருந்தாலும், மனிதன் செய்யும் பல வேலைகளை இன்னும் செயற்கை நுண்ணறிவு செய்ய முடியாது. அதற்கு இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இதனை சீன தொழில் முனைவோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “மனிதனுக்கு இணையாக AI தொழில்நுட்பம் வளரும் நாள் வெகு தொலைவில் இல்லை. கண்டிப்பாக ஒருநாள், மனிதனை விட AI தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து விடும். அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம், ஆனால் விரைவில் அது நிகழும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.