கடந்த சில ஆண்டுகளாக AI குறித்து பேசிவரும் பில் கேட்ஸ், இப்போது ஒரு பெரிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி “AI இரண்டு முக்கியமான தொழில்களை பெரும் அளவில் மாற்றிவிடும்” என்றும்m, அது மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த மாற்றம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துவிடும் எனவும் கணித்துள்ளார்.
மேலும் AI அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது, இப்போது இது நன்கு பயிற்சியுற்ற மருத்துவ ஆலோசனை மற்றும் தரமான கல்வி வழிகாட்டுதல் வழங்கும் நிலையை அடைந்து வருகிறது..
“இன்று, மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் மிகவும் அரிதானவர்கள். ஆனால், வருங்காலத்தில் AI அனைவருக்கும் இந்த சேவைகளை எளிதாக கொண்டு வரக்கூடும்” என பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.
காலையில் எழுந்தவுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட AI கல்வி கிடைக்கும். அதேபோல் டாக்டர்களிடம் ஆலோசனை பெற அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்படாத உலகம் உருவாகும். AI டெக்னாலஜியால் ஒரு புதிய யுகம் பிறக்கப்போகிறது, இது மருத்துவத்தையும், கல்வியையும் முற்றிலுமாக மாற்றும் என பில்கேட்ஸ் கணித்துள்ளார்.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் AI நிறுவனத்தின் தலைமை அதிகாரி முஸ்தபா சுலெய்மான் கூறியபோது, AI மிகப்பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். AI தற்காலிகமாக மனித புத்திக்குத் துணையாக செயல்படும். ஆனால் இறுதியில் மனிதனை மிஞ்சிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் “எல்லா விஷயங்களையும் AI செய்ய முடியாது, சில வேலைகள் எப்போதும் மனிதர்களிடமே இருக்கும்” என்று கூறிய பில்கேட்ஸ் செயற்கை நுண்ணறிவு நோய்களை கண்டறிந்தாலும், மதிப்பீடு செய்ய ஆழமான மனித உறவுகளை கண்டிப்பாக தேவை என்றார்.
AI சில முக்கியமான வேலைகளை மாற்றப் போகிறது என்றாலும் டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களின் சில கடமைகளை AI மிகவும் திறமையாக செய்ய முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை என்று கூறினார்.