தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு திருமணத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார்.
சிம்பு கூறியது என்னவென்றால், திருமணம் செய்வது தப்பில்லை. ஆனால் சரியான நபரை தேர்வு செய்து திருமணம் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு மனக்கசப்பு வரும்போது நீ இல்லையென்றால் வேறொருவர் என்று கடந்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. கால தாமதம் ஆனாலும் சரியான நபருடன் திருமணத்தை செய்ய வேண்டும் என்று பகிர்ந்து இருக்கிறார் சிம்பு.