சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கின. இந்நிலயில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழியை சுத்தம் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை உருவானது. இதற்கு அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாததும், பாலத்தில் நீர்வழிப்பாதை நீளமும், பாலத்தின் உயரம் குறைவாக இருந்ததே காரணம் என கண்டறியப்பட்டிருந்தது
இதையடுத்து, ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் புற பகுதியை சரிசெய்வதற்காக தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதை 80 மீட்டரில் இருந்து 200 மீட்டர் நீளத்திற்கும், பாலத்தின் உயரத்தை 1.5 மீட்டர் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, நீர்வழி பாதை விரிவாக்கம் மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒக்கியம் மடுவு பாலத்தின் 2 பக்கங்களிலும் மேற்கொண்டு 2 வழிச்சாலைக்கான அடித்தள பணிகள் நிறைவடைந்துள்ளது.
நீர்வழி பாதையை சுத்தம் செய்யும் பணியையும் மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக சுத்தம் செய்துள்ளது. பருவமழை காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலம் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது என்றும், பருவமழைக்கு பின்னர் மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரெயில், நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஓக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஐந்து வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கப்படும் மற்றும் அங்கு இருக்கும் பழைய பாலம், புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும்.
டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரிசெய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இருபக்கங்களிலும் மூன்று கூடுதல் வழிச்சாலைகளுக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.
இரண்டு பக்கங்களிலும் இரண்டு வழிசாலைக்கான அடித்தள வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஓக்கியம் மடுவு நீர்வழியை சுத்தம் செய்வது சென்னை மெட்ரோ இரயிலின் முக்கியப் பொறுப்பாக இருந்தது, தற்போது அதுவும் முடிவடைந்துள்ளது, மேலும் பருவமழை காலத்தில் அதிக நீர்வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 14, 2024 அன்று பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டதை சென்னை மெட்ரோ ரயில் குறிப்பிட விரும்புகிறது. மழைக்கு முன்பும் பின்பும் எடுத்த படங்கள், நீர்வழியின் மேம்பட்ட திறனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது , மேலும் வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. பருவமழைக்கு பிறகு மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு கூறினார்கள்.