சென்னை: தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கிய நிலையில, முதல்முறையாக மாநாடு நடத்த திட்டமிட்டடார். தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள், மழை உள்ளிட்ட காரணங்களால் மாநாடு நடப்பது தள்ளிப் போயுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் விஜய் தனது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஜய் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தீப்பந்தம் ஏந்தியபடி போஸ்டர்கள் அரசியல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தள்ளது.. இது தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது. எனினும் அவர்களுக்கு மாநாடு எப்போது? என்ற கேள்வியே பிரதானமாக உள்ளது.
விஜய் ஆலோசனை: அக்டோபர் கடைசி வாரத்தில் மாநாடு நடத்தினால் சரியாக இருக்குமா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் தொடர்ந்து விஜய் ஆலோசிக்கிறாராம்.. அதேநேரம் புதிய படத்தின் படப்பிடிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விஜய் பங்கேற்க இருப்பதால் மாநாடு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளளது.
விஜய் கட்சி மாநாடு எப்போது: இந்த சூழ்நிலையில் அடுத்த வாரத்தில், மாநாடு தேதி குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை விஜய் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரியில் முதல் மாநாடு நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழக வெற்றிக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொடிக்கம்பங்கள்: அதேநேரம் மாநாட்டிற்கு முன்பாக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கம்பங்கள் நடப்பட வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளாராம். மாநாட்டிற்கு முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாராம். கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் சார்பில் அவர் உற்சாகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.