நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா.. விஜய் ஒரே ஒரு சுற்றுப்பயணம் முடிக்கட்டும்.. கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு ஓடி வரும்.. 3வது அணி ஆட்சியை பிடிக்கும்..

விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், அவரது கட்சியை தலைமையாக ஏற்று எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை என சில அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தமிழக…

vijay1

விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், அவரது கட்சியை தலைமையாக ஏற்று எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை என சில அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அதற்கு பதிலளித்துள்ளனர். விஜய் மட்டும் ஒரே ஒரு சுற்று பயணத்தை முடித்துவிட்டால், தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் விஜய்யை நோக்கி ஓடி வருவார்கள் என்று அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் வீட்டில் இருந்தே அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு 15 சதவீதம் வரை வாக்கு சதவீதம் கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். செப்டம்பர் மாதம் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம், ஊர்வலம், ரோடு ஷோ மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஆகியவை அடங்கிய ஒரே ஒரு சுற்று தேர்தல் பணியை விஜய் மட்டும் முடித்துவிட்டால் போதும், அவருக்கு கிடைக்கும் ஆதரவும், மக்கள் கூட்டமும் அதிகரித்து, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணி விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்த்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இந்த பக்கம் திமுக கூட்டணியும் விஜய் மீதுதான் முழு கவனம் செலுத்தி வருகிறது. எனவே, 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது விஜய் மையப்படுத்தி உள்ள தேர்தல் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் பக்கம் வந்துவிட்டால், விஜய் தான் முதல்வர், திருமாவளவன் தான் துணை முதல்வர் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.