தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை தேர்தல் வருவதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததே இல்லை என்றும், விஜய் வருகையால் தான் இரண்டு திராவிட கட்சிகளுமே தற்போது பதறிக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன என்றும் அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் ’ஓரணியில் தமிழ்நாடு” என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். இன்னொரு பக்கம் “மக்களை மீட்போம்” என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.
இரண்டு கட்சிகளுமே காசு கொடுத்துதான் கூட்டத்தை அழைத்து வருகின்றன என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இரண்டு கட்சிகளையும் பத்து மாதத்திற்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு ஒரே காரணம் விஜய் தான் என்றும், விஜய்க்கு நாள் தோறும் அதிகரித்து வரும் வாக்கு சதவீதம் குறித்த தகவலை உளவுத்துறை மூலம் கேட்டுதான் ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்து இப்போதே பிரச்சாரத்தை தொடக்கி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி ஒரு சுற்றுப்பயணத்தை முடித்து, தன் மீதான நம்பிக்கையை வளர்த்தால் தான் மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்ற எண்ணத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
“75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள கட்சி இப்போது போய் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது என்றும், ஏற்கனவே 2 கோடி உறுப்பினர்கள் வைத்திருக்கும் அந்தக் கட்சி, உறுப்பினர்கள் அனைவருமே ஓட்டு போட்டாலே ஜெயித்து விடும் என்ற நிலையில் எதற்காக விஜயை பார்த்து பதறுகிறது ஏன் என்று தெரியவில்லை” என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் கட்சிக்கு ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் எட்டு மாதத்தில் விஜய் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தி.மு.க.வுக்குச் சமமாக இரண்டு கோடி உறுப்பினர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து சலித்துப் போன 30 சதவீதம் வாக்குகள் மொத்தமாக விஜய்க்கு விழும் என்றும், முதல் தேர்தலில் முதல் முறை வாக்குகள், இளைஞர் வாக்குகள், பெண்களின் வாக்குகள், கல்லூரி மாணவர்களின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் ஆகியவை விஜய் பக்கம் போவதால் விஜய் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறி வருகின்றனர்.
“விஜய் தி.மு.க.வுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தலாம், ஆனால் கண்டிப்பாக 2026 இல் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது” என பத்திரிகையாளர் மணி உட்பட ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர்களது கணிப்பு தவறானது என்றும், கண்டிப்பாக விஜய் ஆட்சி அமைப்பார் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மக்கள் கூட்டம் கூடுகிறது, எடப்பாடி பழனிசாமிக்கும் மக்கள் கூட்டம் கூடுகிறது, விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடுகிறது. எனவே, வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தேர்தல் வியூக வல்லுநர்களே கணிக்க முடியாத அளவுக்குக் குழப்பமாக இருக்கிறது என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
