விஜய்க்கு வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம்.. ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் வரும் கூட்டம் கூட்டிகிட்டு வருகிற கூட்டம்: பத்திரிகையாளர் மணி

விஜய்க்கு வருகிற கூட்டம் தானாகவே வருகிற கூட்டம் என்றும், ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் வருகிற கூட்டம் கட்சிக்காரர்களால் கூட்டிக்கொண்டு வரும் கூட்டம் என்றும்” பத்திரிகையாளர் மணி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்…

eps mks vijay

விஜய்க்கு வருகிற கூட்டம் தானாகவே வருகிற கூட்டம் என்றும், ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் வருகிற கூட்டம் கட்சிக்காரர்களால் கூட்டிக்கொண்டு வரும் கூட்டம் என்றும்” பத்திரிகையாளர் மணி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் செய்து வருகின்றன என்பதும், மாறி மாறி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே நேரத்தில், தி.மு.க.வாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும், ஒரு பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்தினால் அதற்கு கூட்டம் சேர்க்க ஆட்களைப் பணம் கொடுத்துத்தான் இன்றும் கூட்டிக்கொண்டு வருகின்றன என்பதும், “குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தார்கள்” என்று பலர் சமூக ஊடகங்களில் வரும் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால், விஜய்க்கு வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம் என்று அவரது கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். அவர் நின்றால் அது மாநாடு என்றும், நடந்தால் ஊர்வலம் என்றும் அவரது தொண்டர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சமீபத்தில் பரந்தூருக்கு சென்றபோது வந்த கூட்டமாக இருக்கட்டும், விக்கிரவாண்டியில் நடத்திய முதல் பொதுக்கூட்டமாக இருக்கட்டும், ஒரு பைசா கூட கட்சியிலிருந்து செலவு செய்யாமல், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் சொந்த செலவில் வந்த கூட்டம் என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், வரும் செப்டம்பர் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மற்ற பெரிய கட்சியின் தலைவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்; கிராமப்புறத்திற்கு அவர்கள் செல்வது மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால், விஜய் தனது சுற்றுப்பயணத்தில் பெரும்பாலும் கிராமப்புறத்திற்கு செல்லவே திட்டமிட்டுள்ளார் என்றும், கிராமப் பகுதிகளில்தான் அவர் பொதுக்கூட்டங்களை நடத்தப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, கிராம மக்களின் வாக்குகளை அவர் மொத்தமாக அறுவடை செய்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

“விஜய்க்கு வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம் என்றும், ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் வரும் கூட்டம் காசு கொடுத்து அழைத்து வரும் கூட்டம் என்றும்” பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளதும் இந்த பரபரப்பிற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. மொத்தத்தில், திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா? தமிழக அரசியலில் ஒரு புதிய புரட்சியை செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.