Y பிரிவு பாதுகாப்பு வந்துவிட்டது.. இனிமேல் வேற லெவல் அதிரடி.. விஜய் எடுக்கும் முக்கிய முடிவு..!

  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. தற்போது, மார்ச் 14ஆம் தேதி முதல் விஜய்க்கு Y பாதுகாப்பு…

vijay Y

 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. தற்போது, மார்ச் 14ஆம் தேதி முதல் விஜய்க்கு Y பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து, 8 முதல் 11 மத்திய அரசின் கமாண்டர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் விஜய் தனது அதிரடியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், சுற்றுப்பயண தேதி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், விரைவில் சுற்றுப்பயணம் பற்றிய அறிக்கை வெளியாகும் எனவும், தமிழகம் முழுவதும் அங்கம் அங்கமாக அவர் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் பெருநகரங்களில் மேடைகள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஆனால், விஜய் சற்று வித்தியாசமாக சின்ன சின்ன கிராமங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், நகர பகுதிகளுக்கு விட கிராம பகுதிகளுக்கு அதிகம் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே நகர பகுதிகளில் விஜய்க்கு ஓரளவு ஆதரவு இருப்பதால், கிராமப் பகுதியில் தான் தனது கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் இவ்வாறு செயல்படுகிறார் என்று தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அரசியல்வாதிகள் நுழையாத கிராமங்கள் கூட கணக்கெடுக்கப்பட்டு, அங்கு விஜய் செல்ல இருப்பதாகவும், மக்களோடு மக்களாக ஒன்று சேரவும், மக்களுடன் நெருங்கி பழகவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, “எம்ஜிஆரை அடுத்து மக்களை நெருங்கி செல்லும் அரசியல் தலைவர்” என்ற பெயரை பெற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் பக்கா பிளான் வெற்றி பெறும் எனில், அவருக்கு 2026ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.