தமிழக அரசியல் எப்போதும் பரபரப்பானது. தற்போது, நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சுமார் ஒரு பிரம்மாண்டமான பிரச்சார வாகனத்தை தயார் செய்து, அடுத்த 10 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியபோதே, “மக்களை நேரில் சந்திக்கும்போதுதான் உண்மையான அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்றார். எனவே விஜய் வெளியே வந்துவிட்டால் திமுக-வுக்குத் தூக்கமற்ற இரவுகள் இருக்கும்” என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் நுழைவு, திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆதரவாளர்கள் “நடிகனுக்கு அரசியல் தெரியுமா?”, “அவருக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும்?” என்று விமர்சிப்பதன் மூலம், தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நடிகர்களை குறைத்து மதிப்பிட்டதன் விளைவை திமுக உணர்ந்திருக்கிறது. இன்று, ஒரு நடிகரான கமலஹாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் திமுக, மற்றொரு நடிகரான விஜய்யை விமர்சிப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
மேலும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, பாஜகவின் பி-டீம் போன்ற குற்றச்சாட்டுகள், திமுகவின் அரசியல் தந்திரத்தைக் காட்டுகிறது. ஒருபுறம் பாஜகவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, மறுபுறம் பாஜக தலைவர்களை வைத்து விழா நடத்துவதும், இந்து சமய அறநிலையத் துறை மூலம் அரசு நிதியில் முருகன் மாநாடுகள் நடத்துவதும், திமுகவின் மதச்சார்பற்ற தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன என்றும் திமுகவின் இரட்டை வேடம் குறித்து .அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான இந்தியா டுடே கருத்துக்கணிப்பு, திமுகவுக்கு முதல் இடம் உறுதியாகிவிட்டதாகவும், த.வெ.க.வும், அ.தி.மு.க.வும் இரண்டாவது இடத்திற்கு போட்டியிடுவதாகவும் கூறுகின்றன. ஆனால், இது நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உண்மையில், தமிழகத்தில் நான்கு முனை போட்டி உருவானால், திமுக பெரிய இழப்பை சந்திக்கும்.
திமுக, அ.தி.மு.க. என இரு கட்சிகளுக்கும் விஜய் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்துவார். இதனால், இரு கட்சிகளின் வாக்குகளும் பிரிக்கப்படும். ஒருவேளை, விஜய் எதிர்காலத்தில் அ.தி.மு.க. – பாஜக கூட்டணியில் சேர்ந்தால், திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
மொத்தத்தில் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவை அச்சுறுத்துகிறது என்பது உண்மை. தனது குடும்ப அரசியலுக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவாவதை திமுக விரும்பவில்லை. எனவே, அவரை ஆரம்பத்திலேயே முடக்க நினைக்கிறார்கள். ஆனால், கடந்த கால வரலாற்றை பார்த்தால், திமுகவின் எதிர்ப்பே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இது விஜய்க்கும் நிகழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
