பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்.. ஆனா அடி சரவெடி.. திமுகவை வீழ்த்த பிளானிங் எல்லாம் பக்காவா இருக்குது.. எவன் தடுத்தாலும் இனி முடியாது..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார் என்று டி.வி.கே. ரமேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் பார்ட்-டைமாக அரசியல் செய்ய மாட்டார் என்றும், திரைப்படங்களில்…

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார் என்று டி.வி.கே. ரமேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் பார்ட்-டைமாக அரசியல் செய்ய மாட்டார் என்றும், திரைப்படங்களில் நடித்துக்கொண்டே அரசியல் செய்வது அவருடைய வழக்கம் அல்ல என்றும், “24 மணி நேரமும், 365 நாளும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்” என்ற நோக்கத்தில் தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் டி.வி.கே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பெரிய பலம் என்றால் ஐ.டி. விங் என்று சொல்லலாம். விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள், விஜய்யின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அனைவருமே தற்போது ஐ.டி. விங்கில், தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பினால் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றும், அந்த அளவுக்கு அவர்கள் அரசியல் பேசுகிறார்கள் என்றும், “எங்களுக்கே தெரியாத டேட்டாக்களை எல்லாம் வைத்து இருப்பவர்கள் இருக்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களெல்லாம் அதிகாரப்பூர்வ ஐ.டி. விங்கில் இல்லை இருப்பினும், “எங்கள் கட்சி மீது ஏதாவது குற்றச்சாட்டு என்றால் உடனடியாக ஆதாரத்தோடு பதில் அளித்து வருகிறார்கள்” என்றும், ” எங்கள் தலைவர் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், அது என்ன விஷயம், அதை அதனுடைய ஏ டூ இசட் என்ன என்பதை எங்கள் ஐ.டி. விங்கில் இருப்பவர்கள் அக்குவேறு ஆணிவேராக மக்களுக்குப் புரியும் வகையில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்” என்றும் டி.வி.கே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் திமுகவைப் போல பொய் செய்து, பொய்களையோ, வதந்திகளையோ பரப்ப மாட்டோம், உண்மையான செய்திகளை மட்டுமே கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். “200 ரூபாய் உபிக்களை போல பொய்யான செய்திகளை நாங்கள் எந்த நேரத்திலும் பரப்ப மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “திமுகவை ஒழிப்பதற்கு என்னென்ன பிளான் என்பது எல்லாமே பக்காவாக தலைவர் விஜய்யால் போடப்பட்டு இருக்கிறது என்றும், எல்லாமே படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், எவன் தடுத்தாலும் இனி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

மேலும், “பரந்தூர் மக்கள் இப்போதும் கூட விஜய் எப்போது கூப்பிட்டாலும் நாங்கள் தலைமை செயலகத்திற்கு வர தயாராக இருக்கிறோம்” என்று கூறி வருகிறார்கள் என்றும், கண்டிப்பாக அது நடக்கும் என்றும் கூறிய டி.வி.கே. ரமேஷ், “விஜய் தலைமையிலான ஒரு பரந்தூர் விவசாயிகள் கூட்டம் தலைமைச் செயலகத்திற்கு சென்றால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.